உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் முறை கோப்பைகளை வெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த போட்டியில் தான் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. மேலும் அவர்களது கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் தன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக ஆடி வருகிறார்.

கடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கூட ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 39 ரன்களை அடித்திருந்தார். மேலும் கடந்த 4 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா 108 ரங்களுடன் 138 ஸ்ட்ரைக் ரேட்டில் 27 ரன்கள் சராசரி வைத்துள்ளார். இந்நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணி பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் நிலையில் தான் மும்பை அணி வீரர் டிம் டேவிட் ஹாதிக் பாண்டியா குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் :அவர் அணிக்காக விளையாடும் விதத்தில் ஹர்திக் தனித்துவமானவர். அதுவே நமக்கு சில சமயங்களில் தேவை. சில சமயங்களில் நான். ஹர்திக் தனது முதல் இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் அடித்த முதல் ஆட்டத்தை நீங்கள் பார்க்கலாம். அவர் மீது முழு நம்பிக்கை உள்ளது. அவருடைய சக்தி எங்களுக்குத் தெரியும். அவர் எவ்வளவு நல்ல வீரர் என்பது எங்களுக்குத் தெரியும். அந்த சூழ்நிலையில் அவர் வரும்போது, அவர் எங்களுக்காக கேம்களை வெல்லப் போகிறார்.

கடந்த போட்டியைப் பாருங்கள், பின் இறுதியில் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக வேகத்தை அதிகரிக்க நாங்கள் மிகவும் கடினமாகப் போராடினோம். ஹர்திக் ஒரு சரியான இன்னிங்ஸ் விளையாடினார், அது எனக்கும் ரொமாரியோவுக்கும் இறுதியில் தொடர தளமாக அமைந்தது.
மேலும் இம்பாக்ட் பிளேயர் குறித்து பேசிய டிம் டேவிட் .கூடுதல் பேட்ஸ்மான்களை வைத்திருப்பதன் கூடுதல் சுதந்திரத்தில், கொஞ்சம் பொறுப்பு குறைவாக இருக்கலாம். சிலர் கொஞ்சம் சுதந்திரமாக விளையாடுகிறார்கள் அல்லது எச்சரிக்கையுடன் விளையாடுகின்றனர். அது இரண்டு வழிகளிலும் செல்கிறது. KKR அவர்கள் விளையாடிய விதத்தில் அவர்கள் நிறைய ரன்களை எடுத்துள்ளனர்.
மறுநாள் இரவு, அவர்கள் அதே வழியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் பெரிதாக ரன்களை அடிக்கவோ அல்லது கீழே விளைவே முயற்சி செய்த்தனர். ஆனால் அவர்க்ளின் மிடில் ஓவர்களில் கொஞ்சம் சொதப்பினார்கள் என்றார் டிம் டேவிட்





