இந்திய அணியானது தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளையும் விளையாட உள்ளது. அதில் முதல் கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடியது. அதில் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பின் 1-1 என்ற வித்தியாசத்தில் தொடரை சமன் படுத்தி இருந்தது. அதற்க்கு அடுத்த கட்டமாக 3 தொடர்களை கொண்ட ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவியது.

மூன்றாவது இன்றைய போட்டியில் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்து இருந்தார் அணியின் கேப்டன் மார்க்ரம். அது அவர்களுக்கு ஆரம்பத்தில் சிறப்பாக அமைந்தாலும் சாம்சனின் ஆட்டம் அதனை சிறப்பாக எடுத்து செல்ல விடவில்லை. இந்திய அணி 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களை குவித்து இருந்தன. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து இருந்தாலும் அதன் பின் அவர்களால் ரன்களை குவிக்க முடியவில்லை.
இந்திய அணியின் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 108 ரன்களும் திலக் வர்மா 52 ரன்களையும் இறுதிகட்டத்தில் வந்த ரின்கு சிங் 27 பந்துகளில் 38 ரன்களை குவித்து இருந்தனர். இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் 6 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடித்து இருந்தனர். இந்த தொடருக்கு முன்னதாக சஞ்சு சாம்சனை இந்திய அணி மறந்து விட்டது என்றும் 2015 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார் ஆனால் அதன் பின் அவருக்கு சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஹென்ட்ரிக்ஸ் 3 விக்கெட்டுகளையும் பர்கர் 2 விக்கெட்டுகளையும் வியான் முல்டர் , வில்லியம்ஸ் மற்றும் மகாராஜ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். 297 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 45.5 ஓவர்களில் 218 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் வித்தியசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. தென்னாபிரிக்கா அணி சார்பில் அதிக பட்சமாக டோனி டி ஜோர்ஜி 81 ரன்களும் மார்க்ரம் 36ரன்களும் க்ளாசென் 21 ரன்களையும் அடித்து இருந்தன.
இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் முகேஷ் குமார் மற்றும் அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். எனவே இந்திய அணி 78 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இதற்க்கு முன்னதாக கோலி தென்னாபிரிக்கா அணியை அதனுடைய சொந்த மண்ணில் கே.எல் ராகுல் தென்னாப்பிரிக்கா அணியை வெற்றி பெற்றுள்ளார். வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் கூறுகையில்,

ஏமாற்றமளிக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றதில் இருந்து அப்படித்தான். சஞ்சுவுக்கு மகிழ்ச்சி, அவர் பல ஆண்டுகளாக ஐபிஎல்-ல் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். துரதிர்ஷ்டவசமாக, அவருக்கு நம்பர் 3-ல் வாய்ப்பளிக்க முடியவில்லை, ஏனெனில் ODIகளில் அந்த முக்கிய இடங்களை ஆக்கிரமித்துள்ள முன்னணி வீரர்கள் உள்ளனர். இங்கு கிடைத்த வாய்ப்புகளை அவரால் கைப்பற்ற முடிந்ததில் மகிழ்ச்சி. வீரர்கள் கொண்டாடிவிட்டு ஓரிரு நாட்களில் மீண்டும் டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்திவிடுவார்.




