உலகெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் விளையாடுவதற்கு விருப்பமாக இருப்பார்கள். இது வணிக ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் விளையாடும் விளையாட்டு ஆகும். இந்த லீக் தொடரிலிருந்து முக்கிய அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.

அவர் 2013 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்ற பின் 2015, 17, 19 மற்றும் 20 ஆண்டுகளில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மும்பை அணியானது டிரேடிங் மூலம் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்தது. இது மும்பை அணி ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு பிறகு அவரை கேப்டன் சியில்ல் அமர வைப்பதற்கான திட்டம் என்று பலர் கூறி வந்தனர்.
ஆனால் தற்போது மும்பை அணி ரோஹித் ஷரம்வை கேப்டன் பதவியில் இருந்து விலகி ஹர்திக்பாண்டியாவை கேப்டன் ஷிப் பதவியை கொடுத்துள்ளது. ரோஹித் சாரமா கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாகவே மும்பை அணி நிர்வாகம் தற்பொழுது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. கேப்டன் பகுதியில் ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கி உள்ளது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் 2024 மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அணியை வழி நடத்துவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் தற்போது மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் ரோகித் சர்மாவின் 10 வருட கேப்டன்ஷிப் முடிவுக்கு வந்துள்ளது இது தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, ரோகித் சர்மா இதுவரை மும்பை அணியின் கேப்டன் 158 போட்டிகளில் விளையாடி உள்ளார் அதில் 87 போட்டிகளில் வெற்றியும் 67 போட்டிகளில் தோல்வியும் நான்கு போட்டிகளில் ட்ராவிலும் முடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரிக்கி பாண்டியிடம் கஇருந்து கேப்டன் பதிவு ஏற்றவுடன் 2013 ஆம் ஆண்டு மும்பை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். அதில் அவர் இறுதிப் போட்டியில் சென்னை அணிஇடம் வெற்றி பெற்று முதன் முறையாக மும்பை அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்தார்.
2015ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சென்னை அணியை மீண்டும் எதிர்கொண்டது. ஆரம்பத்தில் மும்பை அணி விக்கெட்டுகளை இழந்த நிலையில் வைத்த 25 பந்துகளில் அரை சத்தம் அடித்து சென்னை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
2010 ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவின் தலைமையில் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி 157 ரன்களை துரத்த மும்பை அணிக்கு பலமான பார்ட்னர்ஷிப் அமைத்த அதாவது ரோகித் சர்மா டிகாக்குடன் இணைந்து வெற்றி பெற்று மும்பை அணிக்கு மற்றுமொரு கோப்பையை வென்று கொடுத்தார்.

அதே போல் புனே(RPS) அணிக்கு எதிரான கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அது ஒரு கேப்டனாக அவர் சிறந்த கேப்டன் என்பது அது காட்டியிருந்தது.
2019 ஆம் இறுதி போட்டி சென்னை அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை மல்லிங்காவிடம் நம்பி கொடுத்து ஓவர் வீசியிருந்தார். அதில் மல்லிங்கா சிறப்பாக செயல்பட்டு ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்து மற்றும் ஒரு கோப்பையை கைப்பற்றி இருந்தால் கேப்டன் ரோஹித் ஷர்மா.




