கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும் லீக் போட்டிகளை நடத்தி கிரிக்கெட்டை வளர்த்து வருகிறார். அந்த வகையில் தான் அமெரிக்காவில் மேஜர் கிரிக்கெட் லீக் போட்டியானது நடந்து வருகிறது.

இந்த போட்டியானது சில நாட்களுக்கு முன்னர் தான் தொடங்கியது. 6 அணிகள் விளையாடும் இந்த தொடரில் மொத்தமாக 15 போட்டிகள் மட்டுமே நடக்க இருக்கிறது. இந்த ஆறு அணிகளில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய அணிகளும் மீதம் 2 அணிகளை அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களும் வாங்கியுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தான் இன்று காலை இந்திய நேரப்படி மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் :
பொதுவாக சென்னை மற்றும் மும்பை என இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் போது அவை எல் கிளாசிகோ என்று ரசிகர்களால் அழைக்கப்படுவது வழக்கம். இதனால் ரசிகர்களின் கூட்டம் மைத்தனத்தில் ஆர்பரித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணியானது பேட்டிங் செய்தது. தொடக்க வீரரான கான்வே மற்றும் கேப்டன் டூ பிளசிஸ் களமிறங்கிய நிலையில் டூ பிளஸிஸ் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
"OK GOOGLE-Y, GET ME TWO WICKETS!"🎙️
— Major League Cricket (@MLCricket) July 18, 2023
Mohammad Mohsin demonstrates the control of his SIGNATURE GOOGLY to get TWO massive wickets!♾ pic.twitter.com/K8N0RZF5NI
பின்னர் கோடி செட்டி 12 ரன்களிலும் , டேவிட் மில்லர் 17 ரன்களிலும் ஆட்டமிழக்க சென்னை அணிக்கு அழுத்தம் கூடியது. ஆனால் மறுபக்கம் கான்வே நங்குறமாக நின்று தனி ஆளாக ரன்களை விளாசி கொண்டிருந்தார். 55 பந்துகளுக்கு 74 ரன்கள் அடித்த நிலையில் ரஷீத் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு வந்த சான்டனர் அதிரடியாக விளையாடி 1 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 13 பந்துகளில் 27 ரன்களை குவித்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது.
FAF TAKES A BLINDER! 🫣
— Major League Cricket (@MLCricket) July 18, 2023
Is that the game? pic.twitter.com/oPn4m2fo7x
மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் :
இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் தொடக்க வீரரான மோனக் படேல் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க சயான் ஜஹாங்கீர் மட்டுமே பொறுமையாக நின்று 38 பந்துகளில் 41 ரன்களை விளாசினார். இவரை தவிர வேறு யாரும் பெரிதாக ரன்களை அடிக்கவில்லை. டிம் டேவிட் மட்டும் தன்னுடைய வழக்கமான அதிரடியில் விளையாடினாலும் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சென்னை கேப்டன் டூ பிளஸிஸ் அருமையாக காற்றில் பறந்து கேட்ச் பிடித்து அசத்தினார்.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே அடித்து 17 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் முதல் சென்னை அணியானது மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு வந்துள்ளது.





