கிரிக்கெட் அறிமுகமான பிறகு சமீப காலமாக கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியா கிரிக்கெட் மீது ஆர்வமே இல்லாத இடங்களில் கூட தற்போது கிரிக்கெட் போட்டிகளானது அசுரர் வேகத்தில் வளர்ந்து வருகிறார். இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்கும் லீக் போட்டிகளை நடத்தி கிரிக்கெட்டை வளர்த்து வருகிறார். அந்த வகையில் தான் அமெரிக்காவில் மேஜர் கிரிக்கெட் லீக் போட்டியானது நடந்து வருகிறது.

இந்த போட்டியானது சில நாட்களுக்கு முன்னர் தான் தொடங்கியது. 6 அணிகள் விளையாடும் இந்த தொடரில் மொத்தமாக 15 போட்டிகள் மட்டுமே நடக்க இருக்கிறது. இந்நிலையில் TSK, WAF, MINY, SOR அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் SOR அணி TSk அணியை வீழ்த்தி பைனலுக்கு சென்று விட்டது, இந்நிலையில் MINY vs WAF போட்டியில் வெற்றி பெற்ற அதில் மும்பை வெற்றிபெற்ற நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் நியூயார் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியேயான குவாலிபயர் 2 போட்டியானது நடைபெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியானது பந்துவீச்சை தேர்வு செய்த்தது. முதலில் பேட்டிங் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது தொடக்கத்திலேயே தங்களுடைய கேப்டன் டூ பிளசிஸை இழந்தது. இதனை தெடர்ந்து அந்த ஓவரிலேயே மிட்சல் சட்னரும் ஆட்டமிழந்தார். இதனால் அழுத்தம் டெக்சாஸ் அணிக்கு கூடியது. பின்னர் வந்த கோடி செட்டி 14(13) ரன்களில் ஆட்டமிழத்தால் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது தடுமாறியது.

ஆனால் இவர்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மிலந்த் குமார் மற்றும் டேவின் கான்வே இருவரும் சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைக்க மிலந்த் 15.2வது ஓவரில் 37(34) என ஆட்டமிழக்க அதற்கு அடுத்த ஓவரிலேயே டேவின் கான்வே 38(35) ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்கு பிற்காடு சவாவேஜ் 6(2) ரன்களிலும் டேவிட் மில்லர், ஜெரால்ட் கோட்ஸி மற்றும் மோஹஸின் என மூன்றும் பெரும் ஒரே ஓவரில் ஆட்டமிழக்க இறுதியில் TSK அணியானது 158 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் நியூயார் அணியானது தொடக்கத்தில் தங்களுடைய பேட்ஸ்மேன்களை இழந்தாலும் அதற்கு பிறகு சுதாரித்து கொண்டு விளையாடியது. ஒரு கட்டத்தில் 44 ரன்களுக்கு 2 விக்கெட் என்றிருந்த நிலையில் 11 ஓவர்களில் 75 -3 ரன்கள் மட்டுமே எடுத்தது. டிம் டேவிட் ஆட்டமிழந்த்தை தொடர்ந்து கைகோர்த்து கொண்ட டேவிட் வைஸ் மற்றும் டவால்ட் ப்ரீவிஸ் இருவரும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை பறக்க விட்டார்கள்.
We'll be a part of history. 🔥💙
— MI New York (@MINYCricket) July 29, 2023
See you in the final, Seattle. 🤝#OneFamily #MINewYork #MajorLeagueCricket #MINYvTSK pic.twitter.com/egn5Zr2I0h
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார் அணியானது 19 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியும் மூலம் பைனலுக்கு முன்னேறியது. இதனை தொடர்ந்து பைனல் போட்டியானது வரும் 31ஆம் தேதி சியாட்டில் ஆர்க்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார் வெற்றிபெற்றால் முதல் முட்டையாக MLC லீக்கில் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடதக்கது.





