ஐபிஎல் 2023 லீக்கில் 53 வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வந்தது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி 7 இடத்திலும் கொல்கத்தா அணி 8 இடத்திலும் இருந்து வருகிறது. ப்ளே ஆப் ரேசில் முன்னரே இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இவ்விரு அணிகளும் இருந்து வந்தன.

அதன் படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் ப்ரப்சிம்ரன் களம் கண்டனர். ஆரம்பமே சோதபலாக ப்ரப்சிம்ரன் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அதற்க்கு பிறகு வந்த ராஜபக்சே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அவருக்கு பிறகு வந்த லிவிங்க்ஸ்டனுடன் இணைந்த ஷிகர் தவான் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த லிவிங்க்ஸ்டன் வருணின் சுழலில் சிக்கி 15 ரன்களில் வெளியேறினார். அதற்க்கு பின் வந்த அதிரடியாக விளையாடிய ஜிதேஷ் ஷர்மா 21 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அணியின் கேப்டன் ஷிகர் தவான் அரை சதத்தை பூர்த்தி செய்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

ஆரம்பம் முதலே கொல்கத்தா அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் சற்று திணறியே வந்தனர். 16 ஓவர்கள் முடிவில் 131 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. ரிஷி தவான் 19 ரன்களிலும், சாம் கரண் 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். அதன் பின் அதிரடியை காட்டிய ஷாருக்கான் சிறப்பான ஷாட்களை தேர்ந்தெடுத்து ஐயின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது.
180 என்ற இலக்கை எட்டிய கொல்கத்தா அணி சற்று தடுமாற்றத்தையே சந்தித்து வந்தது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் கூர்பாஸ் மற்றும் ராய் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர், இருப்பினும் கூர்பாஸ் 15 ரன்களில் வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த ராய் ஹர்ப்ரீத் ஓவரில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின் வந்த வெங்கடேஷ் ஐயர் அணிக்கு தூண் ஆக இருந்து ரன்களை உயர்த்துவர் என எதிர்பார்த்த நிலையில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அருமையாக விளையாடி கொண்டு இருந்த அணியின் கேப்டன் ரானா அரை சதத்தை பூர்த்தி செய்த நிலையில் ஆவுட்டாகி வெளியேறினார்.அதன் பின் இணைந்த இரு அதிரடி மன்னன்க ரஸல் மற்றும் ரின்கு அதிரடியாக இணைந்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். இறுதியில் இணைந்து கொல்கத்தா அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்கள்.





