உலக டெஸ்ட் போட்டியில் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் பல இக்கட்டான சூழ்நிலையில் விக்கெட்டுகளை எடுத்து பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்திருக்கிறார். நேற்று கூட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அரை சதம் அடித்தது மட்மல்லாமல், இரண்டாவது இன்னிங்கில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டனையும் வீழ்த்தினார். மேலும் அதற்கு முன் முதல் போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி பல சாதனைகளையும் பிடைத்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தான் அஸ்வின் பற்றி சில அறியாத விஷயங்களை இந்திய அணியின் முன்னாள் வீரரும் அஸ்வினுடைய நெருங்கிய நண்பருமாகிய அபிநவ் முகுந்த் பேசியுள்ளார். அவர் கூறியதாவது “அஸ்வின் எப்போதுமே எப்படி நம்மால் கிரிக்கெட் விளையாட முடியும் என்பது பெட்ரி யோசித்து கொண்டே இருப்பார். ஒரு மாணவர் தன்னையுடைய பரீட்சைக்கு எப்படி தயார் ஆகிறாரோ அந்த அளவிற்கு அஸ்வின் தன்னை போட்டிக்கு முன்னர் தயார் செய்து கொள்வார்.
அடுத்து நடக்கும் போட்டியில் எந்த மாதிரியான பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்துகளை வீசினால் சரியாக இருக்கும், எப்படி அவர்களை விக்கெட் எடுக்கலாம் என்பதை பற்றியெல்லாம் அவர் முன்கூட்டியே யோசித்து வைத்திருப்பார். இதற்காக அவர் கடுமையாக உழைப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். மேலும் நான் என்னுடைய 17 வயதில் இருக்கும் போது நானும் அஸ்வினும் போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கி இருக்கிறோம். ஆனால் இப்போது தனக்கு சரியான இடமான மிடில் ஆர்தர் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார்.

அஸ்வினை எனக்கு சிரியவயதில் இருந்தே எனக்கு தெரியும், அவறுடைய பேட்டி பேட்டிங் திறமை வெளியில் வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் நான் அவரை சிறுதிவயதில் இருந்து பர்த்த்தில் அவருக்கு உடல் அளவில் குறை இருக்கிறது. மற்ற கிரிக்கெட் வீரர்கள் தங்களின் உடல்கள் நன்றாக வளைத்து செயல்படுவது போல அஸ்வினால் செயல்பட முடியாது. உடற் தகுதியில் அஸ்வினுக்கு சிலவகையான வரம்புகள் இருக்கிறது.

ஆனால் அந்த தடைகளை என்னால் அவர் தன்னுடைய மூளையை கொடுதான் சரிசெய்து வருகிறார். அஸ்வின் பிரபல ஹாலிவுட் பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் எப்படி வித்தியாசமான முறையில் யோசித்து வித்தியாசமான முறையில் படங்களை இயக்குகிறாரோ அப்படி ரவிச்சந்திரன் அஸ்வினும் கிரிக்கெட்டில் வித்தியாசமாக யோசித்த விக்கெட்டுகளை வீழ்த்திகிறார். நானும் அஸ்வினும் ஒரே அறையில் தான் இரண்டு ஆண்டுகள் இருந்தோம் நான் விரைவாக தூங்கி விடுவேன். ஆனால் அவர் சினிமா பார்த்துக்கொண்டு நேரம் கழித்துதான் தூங்குவார்.

மேலும் கடந்த இங்கிலாந்திக்கு எதிரான போட்டியில் கூட என்னிடம் சென்னை மைதானம் ஏன் இப்படி இருக்கிறது, பராமரிப்பு செய்கிறார்களா? ஏனென்றெல்லாம் பலவிதமான கேள்விகளை என்னிடம் கேட்டார். நான் அவரிடம் நீங்கள் அதே மைத்தனத்தில் தான பிறந்து வளர்ந்திருக்கிறீர்கள். அந்த விஷயங்களையும் போட்டு குழப்பி கொள்ள வேண்டாம் என்று தான் கூறியதாக அபிநவ் முகுந்த் தன்னுடைய பேட்டியில் கூறியிருந்தார்.




