முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணனுக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் கவுரவ துணைத் தலைவராக லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் 1983 முதல் 1987 வரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடினார். அந்த காலகட்டத்தில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தார்.

57 வயதான லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன், இந்திய கிரிக்கெட் அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சர்வதேச அளவில் விளையாடியுள்ளார். வலது கை லெக் ஸ்பின்னரான இவர் மொத்தம் 41 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். கடைசியாக 1987-ல் விளையாடினார். கடந்த 23 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக இயங்கி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் அவர் இணைந்தார். இந்த சூழலில் தமிழ்நாடு மாநில பாஜக விளையாட்டு பிரிவின் கவுரவ தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை மாநில பாஜக விளையாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ளார்.

லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் 1987 இல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், அதன் பின்னர் வர்ணனையாளராக பணியாற்றினார். 2020ல் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் அவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக அமைப்புச் செயலர் கேசவ விநாயக் ஆகியோரின் ஒப்புதலுடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமண சிவராமகிருஷ்ணனை தலைவராக நியமித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என்று லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் கூறினார்.

தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் கௌரவ துணைத் தலைவர். இந்திய கிரிக்கெட்டுக்கு உங்களின் சிறப்பான பங்களிப்பும், விளையாட்டை ஊக்குவிப்பதில் உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரராக உங்கள் அனுபவம் தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் முயற்சிகளை பெரிதும் மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.





