தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்து வரும் தொடரில் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருத்துராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், இஷான் கிஷான் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கபப்ட்டுள்ளது. இதில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட திலக் வர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறார்.

இந்நிலையில் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு அடுத்த வரும் தொடரில் வாய்ப்புகளை வழங்குவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும் வருகின்ற ஆசியா விளையாட்டு போட்டிகளில் இந்திய அணியும் பங்கு பெற இருக்கிறது. இதில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியானது விளையாட இருக்கிறது. மேலும் இந்த அணியானது இந்த வருட ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ராகுல் திரிபாதி, ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்)ஆகியோர் உள்ளனர். மேலும் இந்த அணியில் பங்குபெறும் பல வீரர்கள் எதிர்காலத்தில் இந்திய அணியில் விளையாட்டுவார்கள் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் தான் கம்பீர் ஐபிஎல் மட்டுமே வைத்து வீரர்களை தேர்வு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார். அவர் பேசியதாவது “ஜெய்ஸ்வால் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அவர் இரட்டை சதங்களையும் உள்ளூர் போட்டிகளிலும் முதல் தர ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் விளாசினார். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் அதில் ரன்களை எடுப்பது என்பது சாதாரனம் எனவே அவருக்கு உலக கோப்பை டி20 அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும்.

மறுபக்கம் ரிங்கு சிங்கும் சிறப்பாகத்தான் விளையாடினார். நல்ல திறமைகளும் அவரிடம் இருக்கிறது ஆனால் அவர் ஒரு சீசனில் சிறப்பாக விளையாடினார் என்று ஒரு சீசனை மட்டுமே வைத்து யாரையும் தேர்வு செய்ய கூடாது. உள்ளுர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்துவிட்டு பின்னர் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி ரன்களை எடுத்தால் அவரை இந்திய அணியில் சேர்க்கலாம்.
இந்தியாவிடம் இருக்கும் ஒரு பெரிய தவறே ஐபிஎல் போட்டியில் இரண்டு மாதங்கள் சிறப்பாக விளையாடுவதை பெரிய விஷயமாக எடுத்து கொள்வதுதான் நமக்கு பிரச்சனை என்றார் கம்பீர். இவர் சொல்வதை போல சில ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த பிறகு மோசமான விளையாடி பின்னர் வெளியேறிய பல வீரர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.




