உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். அந்த நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் செய்ய விரும்பியது

அதன் படி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு நிதானமான தொடக்கத்தை அளித்தனர்.ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக குர்பாஸ் 80 ரன்களும் இக்ரம் 58 இடங்களில் முஜீப் 28 ரன்களையும் எடுத்து இருந்தனர். மேலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அதிகபட்சமாக ரஹ்மான், ரஷித் கான் தலா மூன்று விக்கெட்டுகளும் முகமது நபி இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தியும் வெற்றி வாய்ப்பு தேடி தந்தனர்
இங்கிலாந்து போன்ற பெரிய அணிக்கு இது ஒரு எளிதான இலக்கு என்று தான் நினைத்து இருந்த நிலையில் 285 என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக ஹாரி புரூக் 66 ரன்களும் டேவிட் மலான் 32 ரன்களும் ஆதில் ரஷித் 22 ரன்களும் அடித்திருந்தார்கள். இது அவர்களுக்கு பெருத்த அடியாக இருந்தது மேலும் பந்துவீச்சாளர்கள் ஆதில் ரஷீத் மூன்று விக்கெட்டுகளும் மார்க் வூட் இரண்டு விக்கெட் களும் லிவிங்ஸ்டன் ரூட் மற்றும் டோப்லி தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து அணிகள் எளிதாக வென்றது.

ஆட்ட நாயகன் முஜீப் உர் ரஹ்மான் கூறியது:
உலகக் கோப்பையில் இங்கு வந்து சாம்பியன்களை வென்றதில் மிகவும் பெருமையான தருணம். ஒட்டுமொத்த அணிக்கும் இது ஒரு பெரிய சாதனை, நாங்கள் கடினமாக உழைத்து வரும் வாய்ப்பு இதுவாகும். ஒரு சுழற்பந்து வீச்சாளராக, பவர்பிளேயில் பந்துவீசுவது மிகவும் கடினம். ஆனால் நான் வலை பயிற்சியில் வேலை செய்து வருகிறேன். வைட் பந்துவீசுவதில் பிழைக்கு அதிக இடமில்லை அதனால் விக்கெட்டுக்கு விக்கெட்டுகளை வீச முயற்சித்தேன்.

பனி ஒரு பங்கை வகிக்கும் என்று எங்களுக்குத் தெரியும், அதனால்தான் நான் பவர்பிளேயில் பந்து வீச விரும்பினேன். பனி பெய்தாலும் மனதளவில் தயாராக இருந்தேன். இது நிர்வாகத்தைப் பற்றியது. அவர்கள் எனக்கு நம்பிக்கை அளித்து வருகின்றனர். நான் கீழ்-வரிசை பேட்டராகவும் பங்களிக்க விரும்புகிறேன், அந்த 25-30 ரன்கள் அணிக்கும் உதவுகிறது. அதைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ள மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்க விரும்புகிறேன். இது ஒரு குழுவாக நாங்கள் செய்யக்கூடிய ஒன்று மற்றும் ஒரு வீரராக என்னால் செய்ய முடியும்.




