உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று அதாவது ஜூன் 9ஆம் தேதி இறுதிப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில், மூன்றாவது நாளில் திரும்பிய இந்திய அணி, மூன்றாவது நாள் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதாவது 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.

இன்றைய நாள் இந்திய அணிக்கு ஆரம்பத்தில் சிறப்பாகவே அமைந்தது. இந்திய அணியில் இருந்து மூன்றாவது நாளில், அஜிங்க்யா ரஹானே சிறப்பாக பேட்டிங் செய்து 89 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைத்து அற்புதமாக விளையாடி வந்த ஷர்துல் தாக்கூர் அரை சதத்தை பூர்த்தி செய்தார். மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த ரஹானே இறுதிப் போட்டியில் இந்திய அணி அபாரமாக மீண்டு வந்துள்ளது.
அதே நேரத்தில், அஜிங்க்யா ரஹானே சதத்தை தவறவிட்டார், ஆனால் ஒரு அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார். ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் ரஹானேவை ஆட்டமிழக்க ஒரு சிறந்த கேட்ச் பிடித்தார். அதன் பின்னர் உமேஷ் யாதவ் 5 ரன்னில் வெளியேற அற்புதமாக விளையாடி வந்த தாக்கூர் 51 ரன்னில் ஆட்டமிழந்து அணிக்கு எமற்றதையே அளித்தார். அணியின் முக்கிய வீரர்கள் சொதப்பலான பேட்டிங்கை செய்து வந்தாலும், அணியின் மிடில் ஆர்டர் சற்று பலமாகவே இருந்து வருகிறது. இந்திய அணி ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க திணறியே வருகின்றனர்.

இந்திய அணியின் வீரர்களின் ஸ்கோர்களை பொறுத்த வரையில் கேப்டன் ரோஹித் ஷர்மா 15 ரன்களும், கில் 13, புஜரா 14, கோலி 14, சிறப்பாக விளையாடி வந்த ஜடேஜா அரை சதத்தை பூர்த்தி செய்வார் என எதிர் பார்த்த நிலையில் அவரும் 48 ரன்னில் ஆட்டமிழந்தார். கே.எஸ்.பரத் 5 ரன்களை மட்டுமே எடுத்தார். ரஹானே 89 ரன்களும், உமேஷ் 5 ரன்களிலும்,தாக்கூர் 51 ரன்னிலும், ஷமி 13 ரன்களிலும் ஆட்டமிழந்து இன்னிங்க்சை முடித்தனர்.

அதன் பிறகு வந்த விளையாடி கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி தற்போது ஒரு விக்கெட் அதாவது டேவிட் வார்னர் விக்கெட்டை இழந்து, 12 ரன்களை மட்டுமே அடித்து விளையாடி கொண்டிருக்கிறது.





