ஐபிஎல் போட்டியில் மிகவும் முக்கியாயமான அணிகளில் ஓன்று ஆர்சிபி. இந்த அணியின் பல ஆண்டுகளா நட்சத்திர வீரராக இருந்த யுஸ்வேந்திர சாஹல். இவர் ஐபிஎல் போட்டியோ அலல்து சர்வதேச போட்டியோ எதுவாக இருந்தாலும் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க தவிக்கும் போது திடீரென உள்ளே வந்து விக்கெட்டுகளை எடுத்து பாராட்டுகளை பெறுவார். மேலும் சர்வதே போட்டிகளிலும் முக முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து கொடுத்துள்ளார்.

ஆனால் இவரை கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் எடுக்கவில்லை. இது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. மேலும் அந்த வருடம் தான் யுஸ்வேந்திர சாஹல் கடைசியாக ஆர்சிபிக்கு விளையாடினார். அதற்கு பிறகு RCB அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சாஹலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6.50 கோடிக்கு ஏலம் எடுத்த நிலையில் அந்த அணிக்காக 2 வருடங்களாக அவர் விளையாடி வருகிறார்.
யுஸ்வேந்திர சாஹல் பேட்டி :
இப்படிப்பட்ட நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்த சாஹல் பல விஷயங்களை கூறியிருந்தார். அதில் டி20 உலக கோப்பை 2021யில் எடுக்கப்படாதது குறித்தும் பேசியிருந்தார். அவர் கூறுகையில் “நான் கடந்த 2021 டி20 உலக கோப்பையில் தேர்ந்தெடுக்க படாத போது மிகவும் வருத்தமடைந்தேன். நான் அந்த வருட ஐபிஎல் தொடரில் துபாயில் தான் விளையாடி இருந்தேன். அதோடு என்னுடைய மனைவியும் அப்போது என்னுடன் இருந்தார்கள். அதற்கு அடுத்த நாள் நாங்கள் துபாய்க்கு செல்ல வேண்டியதாக இருந்தது.

மேலும் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டி மாற்றப்பட்டதால் அங்கு சென்றோம். மேலும் அங்கு ஒரு வாரம் தனிமையில் இருந்தோம். அப்படி இல்லை என்றால் நீங்கள் இல்லையெனில், நீங்கள் ஓய்வெடுக்க வெளியே சென்றிருக்கலாம். ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் என்னோடு என் மனைவி இருந்தார்கள். எனவே என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடிந்தது. அவர் மட்டும் அங்கே இல்லை என்றால் மிகவும் மோசமான கோபமடைந்திருப்பேன்.
என்னுடைய மனைவியுடன் அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தோம். சில படங்களை பார்த்தோம். எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால் விராட் கோலி தான் அப்போதைய இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அதோடு நான் அவருடைய தலைமையின் கீழ் தான் ஐபிஎல் போட்டியிலும் விளையாடி இருந்தேன். ஆனால் அவரிடம் நான் ஏன் இந்திய அணியில் எடுக்கப்படவில்லை என்று ஒரு வாழ்த்தி கூட கேட்கவில்லை.

விராட் கோலி கூறியிருந்தது :
இந்நிலையில் யுஸ்வேந்திர சாஹல் ஏன் அணியில் இடப்பெறவில்லை என்பது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ள விராட் கோலி “அவரை எடுக்காமல் இருப்பது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால் ராகுல் சஹர் நல்ல வேகத்தில் வீசுகிறார். அதோடு அவர் ஸ்ரீலங்கா மற்றும் இங்கிலாந்திற்கு எதிராக திறமையாக வீசினார். UAEயில் உள்ள பிட்ச் இவர் போன்றவருக்கு ஏற்றது சரியாக இருக்கும் என்று கூறினார். ஆனால் அந்த ஐபிஎல் சீசனில் யுஸ்வேந்திர சாஹல் மிகவும் சிறப்பாகவே அந்த மைதானங்களில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.





