ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கபட்ட இப்போட்டியானது மழையின் காரணமாக தேதி மாற்றம் செய்யப்பட்டு போட்டி நடந்து வந்தன. சென்னை அணி இந்த போட்டியில் வென்றால் 5 வது முறை கோப்பையை கைப்பற்றும். டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பௌலிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு அனைத்தும் சரியாக செல்ல சென்னை அணிக்கு மோசமான பந்துவீச்சாக மாறியது. இறுதியில் குஜராத் அணி 20வது ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவே ஆகும். 215 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே மழை குறுக்கீட்டு போட்டி நிருத்தி வைக்கப்பட்டது.
இதனால் 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் அணியின் கூட்டு முயற்சியால் சென்னை அணி இறுதி ஓவரில் அதிர்ச்சி கொடுத்து வெற்றி பெற்றது. இதற்கு காரணம் ஜடேஜா மற்றும் அணியின் கூட்டு முயற்சி தான். மேலும் வெற்றி பெற்றதும் சென்னை அணியின் கேப்டன் தோனி ஜடேஜாவை தூக்கி கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டார். அது ரசிகர்களுக்கு மனதை ஊருக்கும் காட்சியாகவும், அதே நேரத்தில் தோனி ஓய்வு குறித்து என்ன சொல்ல போகிறார் என்று ஆர்வத்துடன் இருந்தனர்.

தோனி கூறியது :
இந்நிலையில் போட்டி முடிந்து தோணியிடம் ஓய்வு எடுக்க போகிறீர்களா என்று ஹர்ஷா போக்லே தோனியிடம் கேட்கையில் அவர் கூறியதாவது “சொல்லப்போனால் ஓய்வு பெற இது சரியான நேரம் என்று தான் நினைக்கிறேன். ஆனால் எனக்கு நான் எங்கு சென்றாலும் ரசிகர்கள் நான் எங்கு விளையாட சென்றாலும் அவர்கள் எனக்கு கொடுக்கும் அன்பையும் ஆதரவையும் பார்க்கும் போது நான் இன்னமும் ஒரு சீசன் விளையாடலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
தற்போது அவர்களுடைய அன்பிற்கு மிக்க நன்றி என்று சொல்வது மட்டுமே எளிதான ஓன்று. ஆனால் அடுத்த 9 மாதங்கள் கடுமையாக உழைத்து குறைந்த பட்ச்சம் ஒரு ஐபிஎல் சீசனிலாவது விளையாட முயற்சி செய்வேன் என்றார். இருந்த போதிலும் அது என்னுடைய உடல் நிலையை பொறுத்தது. எனக்கு இன்னமும் 6 முதல் 7 மாதங்கள் யோசிக்க நேரம் இருக்கிறது. அது எனக்கு கிடைத்திருக்கும் பரிசு.
இந்த அளவிற்கு என் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் நான் இதனை செய்கிறேன். இந்த சீசன் முழுவதும் எங்கு சென்றாலும் என்னுடைய பெயர் ஒலிக்கிறது. அதனை நான் இன்னமும் கேட்க ஆசை படுகிறேன் என்று கூறினார் தோனி. இதன் மூலம் தோனி இன்னமும் ஒரு சீசன் விளையாடுவார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. அவர் உடல்நிலையும் கருத்தில் கொண்டாலும் தோனி அந்த நேரத்தில் என்ன செய்வார் என்று அவருக்கு மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடதக்கது.





