மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டவது டெஸ்ட் போட்டியானது குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் களமிறங்கிய இந்தியா அற்புதமாக தொடங்கினாலும் ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நேரத்தில் கைகோர்த்த விராட் மற்றும் ஜடேஜா இருவரும் இணைத்து பட்டனர் ஷிப் அமைத்தனர் இதில் விராட் சதம் விளாசினார். இதன் மூலம் தன்னுடைய 500வது சர்வதேச போட்டியில் 100 அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஆனால் சதம் அடித்த விராட் கோலி 206 பந்துகளில் 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் விராட் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் தான் இந்த போட்டியின் இரண்டாவது நாள் முடிந்து பேசிய விராட் கோலியிடன் 5 வருடங்கள் கழித்து வெளிநாட்டில் சதம் அடித்திருப்பதை எப்படி உனர்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
விரட்ட கோலி பதில் :
அதற்கு பதிலளித்த கோலி “நான் மிகவும் ரசித்து விளையாடினேன். எனக்கு தேவையான ஒரு ரிதத்தில் இருந்தேன். என்னுடைய அணிக்கு அழுத்தமான சூழ்நிலைகளில் ரன்களை குவிப்பது எனக்கு கிடைத்த வாய்ப்பாக நான் கருதுகிறேன். நான் களமிறங்கிய போது வெஸ்ட் இண்டீஸ் அணியானது சிறப்பாக பந்துவீசி கொண்டிருந்தது. அதனால் எனக்கு தேவையான நேரத்தை நான் எடுத்துக்கொண்டேன். மைதுனம் கொஞ்சம் வேகமாக இருந்தது என்றார் விராட்.

இந்நிலையில் 5 வருடங்களுக்கு பிற்காடு வெளிநாட்டில் சதம் அடித்தது குறித்து பேசிய அவர் ” நான் அதனை பற்றி பேச தேவையில்லை. நான் மொத்தமாக வெளிநாடுகலி 15 சதங்களை விளாசி இருக்கிறேன். அது ஒன்றும் மோசமான சாதனை கிடையாது. சொல்லப்போனால் நான் வெளிநாடுகளில் தான் அதிக சதங்களை எடுத்துள்ளேன். வெளிநாடுகளில் 30 போட்டிகள் நான் இன்னும் விளையாட வில்லை. அதே போல பல அரை சதங்களையும் வெளிநாடுகளில் விளாசி இருக்கிறேன்.

என்னால் எவ்வளவு விரைவாக ரன்களை எடுக்க முடியுமோ அதை நன் செய்கிறேன். ஒருவேலை நான் 50ரன்களில் ஆட்டமிழந்தால் சதத்தை மிஸ் செய்ததாக கூறுவார்கள். அதே நான் 100 ரன்களில் ஆட்டமிழத்தால் 200 ரன்களை மிஸ் செய்ததாக கூறுவார்கள். நான் சாதனைகளை பற்றி யோசிப்பதில்லை. அவர்கள் நினைவில் கொள்வது நான் அணிக்காக செய்யும் விஷயம் தான். இந்திய அணிக்காக 500 போட்டிகளை விளையாடி இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
He knows a thing or two about scoring a TON 💯 in Trinidad! 😊 🙌#TeamIndia | #WIvIND | @imVkohli | @windiescricket pic.twitter.com/FZw7stxSqC
— BCCI (@BCCI) July 22, 2023
நான் 500 போட்டிகள் விளையாடுவேன் என்று கனவிலும் கூட நினைத்து பார்க்கவில்லை. இது எல்லாம் கடின உழைப்பு, எங்கள் உங்களுடைய விளையாட்டிற்காக எவ்வளவு வலிக்கிறீர்களோ அதற்கான பலன் தான் இது. நான் என்னுடைய உடற்தகுதிக்கு தகுந்தவாறு 300 பந்துகளுக்கு மேலே அட விரும்புகிறேன். என்னுடைய உடற்தகுதி நான் போட்டிகளுக்கு இடையே என்னை தகவமைத்து கொள் உதவியாக இருக்கிறது என்றார் விராட் கோலி





