உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.

கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் இவர் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரன் மெஷின் என்று பாராட்டும் அளவிற்கு பல சாத்தனைகளை படைத்து வருகிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் விராட் கோலியின் உற்ற நண்பராக இருந்தவர் ரவி சாஸ்திரி. மேலும் இருவரும் இந்தியா அணிக்காக ஒன்றாக பணியாற்றி இருந்தார்கள்.
ஆனால் ஒரு முறை கூட ஐசிசி போட்டிகளில் கோப்பையை வெல்ல முடியாத நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியும், பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி சாஸ்திரியும் விலகினார்கள்.இவர்களை அடுத்து ரோஹித் கேப்டனாகவும் ராகுல் ட்ராவிட் பயிற்சியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர்களாலும் ஐசிசி போட்டிகளில் கோப்பைகளை வெல்ல முடியவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் கூட மோசமாக ஆடி தோல்வியை தழுவியது இந்தியா.

ரவி சாஸ்திரி கூறியது :
இந்நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ரவி சாஸ்திரி விராட் கோலி குறித்து சில சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார். ரவி சாஸ்திரி சர்வதேச கிரிக்கெட்டில் கூறுகையில் விராட் கோலி ஒரு புலி போன்றவர். தன்னை போட்டிகளுக்கு தயார் படுத்திக்கொள்வதிலும், உடல் தொகுதியிலும் அவர் ஒரு பெஞ்சு மார்க்கை வைத்து உலகம் முழுவதும் மிகவும் விரும்பும்படியான வீரராக விராட் இருக்கிறார்.
விராட் கோலியின் மன பலம் மற்றும் அவருடைய தன்னம்பிக்கை நாம் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது என்று கூறினார் ரவி சாஸ்திரி. மேலும் நான் கோலி எல்லா உணவுகையும் உட்கொள்கிறார் அதனால் தான் இப்படிப்பட்ட பலமான கிரிக்கெட் வீரராக இருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் விராட் கோலி என்னிடம் பின்னர் கூறினார், நான் சைவம் அசைவ உணவுகளை உன்ன மாட்டேன் என்று. அதனை கேட்டதும் எங்கு ஆச்சரியமாக இருந்தது.
Ravi Shastri said "Virat Kohli is the Tiger of cricket. The way he set the benchmark for work ethics, fitness that is needed to play at the highest level is incredible. He captures the imaginations across the world". pic.twitter.com/lNYhcsBom8
— Johns. (@CricCrazyJohns) June 19, 2023
விராட் கோலி தன்னுடைய உடல் நலத்தை கருத்தில் கொண்டு தனனுடைய உணவு பழக்கத்தை மாற்றிக்கொண்டுள்ளார் என்று கோலியை வெகுவாக பாராட்டினார் ரவி சாஸ்திரி. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. ஏனென்றால் இரண்டு இன்னிங்கிளும் சேர்த்தே 63 ரன்கள் மட்டுமே எடுத்தார். அது ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டிய நிலையில் அடித்த போட்டிகளில் சிறப்ப ஆடுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.





