ஐபிஎல் லீக் 2023ல் நடக்கும் 24வது லீக் ஆட்டத்தில் விராட் கோலியும் மகேந்திர சிங் தோனியும் மீண்டும் ஒருவரையொருவர் எதிர்கொள்கின்றனர். பெங்களூரு மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று சின்ன சாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடக்கத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளேஸிஸ் பந்து வீச முடிவு செய்தார். அது சரியான முடிவு தான என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ருதுராஜ் 3 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனிடையே வேகமாக பேட்டிங் செய்த ரஹானே 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அணியில் அவுட் ஆனார். டெவோன் கான்வே ஒரு பக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார். ஆனாலும் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பார்னெல் தனது இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசினார். அவர் RCB க்காக நன்றாகப் பந்துவீசினார், ஆனால் இன்று அவர் கொஞ்சம் ஃபார்ம் அவுட்டாகத் தோன்றினார்.
அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் முதலில் ஒரு பவுண்டரி அடித்தார், பின்னர் கடைசி பந்தில், கான்வே ஒரு அற்புதமான ஷாட்டை அடித்து 6 ரன்கள் எடுத்தார். 45 பந்துகளில் 83 ரன்கள் அடித்த டெவோன் கான்வே சிறப்பாக விளையாடி 6 சிக்ஸர்களும் 6 போர்களும் அடித்து ஹக்ஸர் படேலிடம் ஆட்டமிழந்தார். ஆனாலும் சென்னையின் அதிரடி ஆட்டம் நிற்கவில்லை அவரை தொடர்ந்து சிவம் துபே 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் அவரும் சிராஜிடம் ஆட்டமிழந்தார்.

அதற்கு பிறகு களமிறங்கிய ராய்டு 6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து தன்னுடைய வேலையை செய்து கொடுத்தார். அதற்கு பிறகு ஜடேஜா மற்றும் மெயின் அலி பெரிதாக ரன்கள் எடுக்காத நிலையில் கடைசி ஓவரில் 2 நோ பால் மற்றும் 2 ஒயிட் வந்தது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 226 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது களமிறங்கிய பெங்களூரு அணி முதல் ஓவரிலேயே தடுமாறியது.
— INDIAN CRICKET (@FanOfIndianCric) April 17, 2023
அதன் காரணமாக விராட் கோலி தன்னுடைய ஒரு சாதனையை தவறவிட்டார். அதாவது சென்னை அணிக்கு எதிராக விராட் கோலி சில பிரமாதமான இனிங்கை ஆடியிருக்கிறார். அந்த வகையில் இந்த ஆட்டத்தில் 21 ரன்கள் மட்டுமே அடித்திருந்தால் சென்னை அணிக்கு எதிராக 1000 ரன்கள் அடித்த நபர் என்ற சாதனையை படித்திருப்பார். ஆனால் துரதிஷ்ட வசமாக அந்த சாதனையை 15 ரன்களில் தவறவிட்டார் விராட் கோலி.





