உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் அனைத்து அணிகளும் தங்களிடம் இருக்கும் பலம் மற்றும் பலவீனம் குறித்து நன்கு அறிந்து வைத்திருக்கின்ற்றனர். இது ஒரு புறம் இருக்க இந்த சீசனில் மோசமாக அடிவாங்கி வருகிறார் பெங்களூரு அணி. இந்த தொடரில் ஒரே ஓரு போட்டியில் மட்டுமே வென்ற ஆர்சிபி புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூரு அணி சமீபத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக மோதியது. இந்த போட்டியில் அணிகளுக்கு இடையே இருக்கும் போட்டி என்றாலும் விராட் கோலிக்கும் கம்பீருக்கும் இடையே சில சம்பவங்கள் ஏற்படும் என்று ஆவலாக இருந்தனர். இது கால காலமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு கூட இவர்களுக்கு இடையே பெரும் சண்டையானது நடந்தது. அந்த சம்பவம் தான் அந்த ஆண்டின் சூடான செய்தியாக இருந்தது.
இந்நிலையில் இந்த போட்டியிலும் அப்படி ஏதாவது நடக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கம்பீரை கட்டியணைத்து பிரச்னையை முடித்து கொண்டார் விராட் கோலி. இதனால் சம்பவத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனாலும் இந்த சம்பவத்தை மீல்ஸ் கிரிக்கெட்டர்கள் பலர் கலாய்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவீன் உல் ஹக்கிற்கும் விராட் கோலிக்கும் இடையே சம்பவம் நடந்தது. ஆனால் அவரிடமும் சமாதானமாகி விராட் கோலி போனதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் இது குறித்தது சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் விராட் கோலி.
Here's the Video 🤣 pic.twitter.com/pEDgJhQm0m
— Ayush 🚩 (@ayriick_) April 11, 2024
அவர் கூறுகையில் : ரசிகர்கள் நான் செய்த விஷயத்தினால் கொஞ்சம் ஏமாந்து விட்டனர். நான் நவீன் உலா ஹக் மற்றும் கம்பீர் பாய்யையும் கட்டிப்பிடித்தேன். எனவே அவர்களுக்கு மாசாலா இல்லாமல் போனது.
இந்த நிகழ்வு குறித்து பேசிய நவீன் உல் ஹக் கூறுகையில் : அவர் என்னிடம் இதனை முடித்து கொள்ளலாம் என்று கூறினார். நானும் சரி முடிந்து கொள்ளலாம் என்றேன். நாங்கள் அதற்கு சிரித்துக் கொண்டோம். மேலும் அவர் என்னிடம் கூறினார் : இனி என்னுடைய பெயர் உங்களுக்கு கேட்காது. ரசிகர்களிடம் இருந்து நல்ல ஆதரவு மட்டுமே கேட்கும் என்றார் நவீன் உல் ஹக்.




