உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.

கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் இவர் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரன் மெஷின் என்று பாராட்டும் அளவிற்கு பல சாத்தனைகளை படைத்து வருகிறார். இந்த நிலையில் தான் தற்போது நடந்து வரும் உலக கோப்பை தொடரில் விராட் கோலி ஒரு அதிரடி வீரராக செயல்பட்டு வருகிறார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை 100 சதம் சாதனையையும் முந்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நவீன கால கிரிக்கெட்டில் மரபு ரீதியிலான ஷாட்டுகளை விளையாடும் விராட் கோலி ஜாம்பவான் கிரிக்கெட்டர்களே ஆச்சரிய படும் படியாக அற்புதமாக அவ்விளையாடி வருகிறார் விராட்கோலி. இந்நிலையில் விராட் கோலி இஅன்னமும் சில காலம் தான் விளையாடுவார் என்ற நிலையில் தற்போது டி20 உலக கோப்பை போட்டிக்கு தயாராகியுள்ளனர் விராட் கோலி.

இந்நிலையில் இதற்கு பிறகு விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்லும். இந்நிலையில் தான் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய ஓய்வு குறித்து பேசியுள்ளார் விராட் கோலி. அவர் கூறுகையில் : ஓய்வு குறித்த சிந்தனை மிகவும் எளிமையானது. ஒரு விளையாட்டு வீரராக நான் நினைக்கிறேன்.
எங்கள் வாழ்க்கைக்கு ஒரு இறுதி தேதி உள்ளது. அதனால் நான் பின்னோக்கி வேலை செய்கிறேன். நான் குறிப்பிட்ட நாளில் இதைச் செய்யாமல் விட்டுவிட்டோம் என்று நினைத்து எனது வாழ்க்கையை முடிக்க விரும்பவில்லை. என்னால் எப்போதும் தொடர முடியாது.
நான் எனது வேலை முடிஞ்சதும் போய்டுவேன், கொஞ்ச நேரம் என்னைப் பார்க்க மாட்டேங்குறீங்களே. அதனால நான் விளையாடுற வரைக்கும் என்னோட எல்லாத்தையும் கொடுக்கணும், அதுதான் என்னைத் தொடர வைக்கிறது என்றார் விராட் கோலி.





