தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் விராட் கோலி தனது வழக்கமான நோக்கத்துடன் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா அணியை டி20 போட்டியில் தொடரை சமன் செய்து இருந்ததாலும் ஒரு நாள் போட்டியை 2-1 என்று தொடரை கைப்பற்றி இருந்தந்து. அதன் பின் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.

முதல் ஆட்டம் செஞ்சூரியனில் செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 26 அன்று தொடங்குகிறது. அதில் இந்திய அணியின் அதிரடி வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைப்பார் என்று இண்டிஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருகின்றனர்.கோலி தென்னாப்பிரிக்காவில் ஏழு டெஸ்ட் போட்டிகளில் 51.35 சராசரியில் 719 ரன்கள் குவித்துள்ளார். 2018 செஞ்சூரியன் டெஸ்டில் அவர் 217 பந்துகளில் 153 ரன்கள் எடுத்தது, தென்னாப்பிரிக்கா மைதானத்தில் அவர்களை வெற்றி கொள்ள வேண்டும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறனர்.

2018 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் மைதானத்தில் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது கோலிக்கு இருந்த அதே மனநிலையில் விளையாடுவாரா என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீருடன் ஒரு கேள்வி எழுப்ப பட்டு இருந்தது. இது குறித்து கம்பீர் கூறுகையில், நீங்கள் விளையாடும் விக்கெட்களின் வகையைப் பொறுத்து நிறைய விஷயங்கள் இருக்கும். விக்கெட் பிளாட்டாக இருந்தால், ஒரே மாதிரியான பேட்டிங் மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டைப் பார்ப்பீர்கள்.
இருப்பினும், விக்கெட் சவாலானதாக இருந்தால், உங்கள் மிக முக்கியமான வீரர் ஸ்ட்ரைக் ரேட்டைப் பற்றி யோசித்து ஒரு வாய்ப்பை அளிக்கும் ஷாட்டை விளையாடுவதை நீங்கள் விரும்பவில்லை. முதல் சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலிக்குப் பிறகு பேட்டிங் செய்வார் என்பது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் மனதில் இருக்கும். விராட் கோலி அதே நோக்கத்துடன் பேட் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

“டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த நோக்கமும் இல்லை என்று நான் எப்போதும் நம்புகிறேன். நீங்கள் சூழ்நிலை, நிலைமைகள் மற்றும் பந்து வீச்சாளரின் ஸ்பெல்க்கு ஏற்ப விளையாடுகிறீர்கள். ஒரு பந்துவீச்சாளர் நல்ல ரிதத்தில் இருந்தால், ஒரு நாள் முழுவதையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால், நீங்கள் அந்த ஸ்பெல்லைப் பார்க்கிறீர்கள். டி20 அல்ல, யாராவது நன்றாக பந்துவீசினாலும் நீங்கள் ஒரு வாய்ப்பைப் பெற வேண்டும்.ககிசோ ரபாடா போன்ற ஒரு வலிமையான பந்துவீச்சாளரிடமிருந்து ஒரு வித்தியாசமான ஸ்பெல்லை எச்சரிக்கையுடன் விளையாடுவது டெஸ்ட் கிரிக்கெட்டில் சில நேரங்களில் மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.





