
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது அதில் இன்றைய ஆறாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. பஞ்சாப் அணி இதற்கு முன்னதாக டெல்லி அணியிடம் வெற்றி பெற்றது, பெங்களூரு அணியதற்கு முன்பு சென்னை அணியிடம் தோல்வியை தழுவிய நேற்றைய போட்டியில் களமிறங்குகின்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரில் அணியின் கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் அதிகபட்சமாக அணியின் கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்கள் ஜிதேஷ் ஷர்மா 27 ரன்களும் பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களையும் அடித்து இருந்தனர். பெங்களூரு அணி சார்பில் முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் இரண்டும் விக்கெட்டுகளையும் யாஷ் தாயால் மற்றும் அல்சாரி ஜோசப் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். எனவே பஞ்சாப் அணி ஆறு விக்கெட்டுகளை எழுந்து 176 ரன்கள் குறித்து இருந்தது.
177 ரன்களை இலாகாக் கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணிக்கு ஆரம்பமே பெரிய அடியாக இருந்தது. கேப்டன் டு பிளசிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி அணிக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்து இருந்தார். அதன் பின் வந்த கிரின் 3 ரன்களிலும் ரஜத்படித்தார் 18 ரன்களிலும் மேக்ஸ்வெல் 3 ரன்களை எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். யார் விக்கெட்டை இழந்தாலும் மற்றொரு பக்கம் நிதானமாக விளையாடிய விராட் கோலி 77 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான ஆட்டத்தால் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது.

சமீப காலமாகவே விராட் கோலி T20 உலகக்கோப்பை அணியில் இருக்க மாட்டார் என்று பல செய்திகள் வந்தது. அதிலும் சிலபேர் விளம்பரத்திற்காக விராட் கோலி அணியில் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். இது குறித்து நேற்று வெற்றிக்குப் பின் விராட் கோலி கூறுகையில, இந்த வெற்றி குறித்து அதிக உற்சாகமடைய வேண்டாம், இது இரண்டு விளையாட்டுகள். இதன் (ஆரஞ்சு தொப்பி) என்னவென்று எனக்குத் தெரியும். இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

மக்கள் விளையாட்டைப் பற்றி நிறைய பேசுகிறார்கள். நாளின் முடிவில் நீங்கள் சாதனைகள், புள்ளிவிவரங்கள் அல்லது எண்களைப் பற்றி பேசவில்லை. T20 கிரிக்கெட்டை விளம்பரப்படுத்தும் நோக்கில் பேசப்படும் பேச்சுக்களில் மட்டுமே தான் என் பெயர் அடிபடுவதை பார்க்க முடிகிறது. ஆனால் இன்னும் எனக்குள் வெளிக்காட்ட நிறைய இருக்கிறது என்றும் ஆட்டநாயகன் விராட் கோலி கூறியிருந்தார்.





