இந்திய அணி இந்த வருடம் அமேரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் உலகக்கோப்பை 2024க்காக இளம் வீரர்களை தயார் படுத்தி வருகிறது. அதற்க்கு முதற்கட்டமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 T20 தொடர்களை இந்தியாவில் விளையாட உள்ளது. அதில் இன்றுஇரண்டாவது போட்டி இந்தூர் நடைபெற்றது. இந்த தொடருக்கு இந்திய அணியின் முன்னனி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா 14 மாதங்களுக்கு பின் T20 இந்திய அணியில் அவர் இணைந்துள்ளார்.இந்திய அணி இரண்டாவது போட்டியை இன்று விளையாடி இருந்தது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பௌலிங்கை தேர்வு செய்து இருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார்கள். அதில் அதிகபட்சமாக குல்பாடின் 57 ரன்களையும் நஜிபுல்லா 23 ரன்களையும் மற்றும் முஜீப் 21 ரன்களை மட்டுமே அடித்து இருந்தனர். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் ஷிவம் துபே 1 விக்கெட்டையும் அவர் வீழ்த்தி இருந்தனர்.
அதன் பின் 173 ரன்களை இலக்காகக்கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் பெரும் அடியாக விழந்தது கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஆட்டமிழப்பு தான். இந்திய அணி 5 ரன்களை இருக்கும் போது கேப்டன் ரோஹித் ஷர்மா முதல் பதில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் ஜெய்ஸ்வால் ஷிவம் துபே மற்றும் விராட் கோழியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் இந்திய அணியின் அதிகபட்சமாக ஷிவம் துபே 63 ரன்களும் ஜெயஸ்வால் ரன்களும் விராட் கோலி ரன்களையும் அடித்து இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் கரீம் ஜனத் 2 விக்கெட்டுகளையும், நவீன்-உல்-ஹக் மற்றும் ஃபசல்ஹாக் ஃபாரூக்கி தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். ஷிவம் துபே தனக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்புகளை அவர் சிறப்பாகவே பயன்படுத்தி வருகிறார். முதல் போட்டியில் 60 ரன்களும் இந்த போட்டியில் 63 அடித்து கிடைத்த வாய்ப்புகளையும் அவர் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார்.விராட் கோலி குறித்து ரெய்னா கூறுகையில்,
எதிர்வரும் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கோலி களமிறங்க வேண்டும் என்று ரெய்னா கூறினார். 2022 டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் கடைசியாக டி 20 ஐ விளையாடிய கோலி, கிட்டத்தட்ட 14 மாத இடைவெளிக்குப் பிறகு தனது முதல் டி 20 ஐ 181.25 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார். “இந்த உலகக் கோப்பையில், விராட் கோலி நீண்ட நேரம் நடுநிலையில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அது அவரது ஸ்ட்ரைக் ரேட்டை விட முக்கியமானது. ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் 765 ரன்கள் எடுத்ததை நாம் அனைவரும் பார்த்தோம். அந்த ஆடுகளங்களுக்கு அவர் தேவை. ஆடுகளங்கள் எளிதாக இருக்காது, மர்ம சுழற்பந்து வீச்சாளர்களுடன் இது கொஞ்சம் தந்திரமானதாக இருக்கும்” என்று ரெய்னா கூறினார்.





