உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது ஏற்கனவே பல போட்டிகள் நிறைவடைந்த நிலையில் அணிகள் தங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என் இரண்டையுமே அறிந்து வைத்திருக்கிறது. சில அணிகளுக்கு இந்த ஐபிஎல் தொடர்ந்து சிறப்பாக ஆரம்பித்தாலும் சில அணிகளுக்கு ஆரம்பமே தோல்வியாக ஆரம்பித்தது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றார் பெங்களூரு அணியை கூறலாம்.

பெங்களூரு அணிக்கு இந்த ஐபிஎல் சீசன் கொஞ்சம் ஏமாற்றத்துடனே தொடங்கியது. 4 போட்டிகளை விளையாடியுள்ள ஆர்சிபி அணி அதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மேலும் புளிப்பாட்டியலிலும் பின்தங்கி -0.876 என்ற NRR போயிண்டுகளுடன் கொஞ்சம் மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது.
இருந்த போதிலும் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 203 ரங்களுடன் ஆரஞ்சு தொப்பியின் உரிமையாளாராக இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சராசரியான 68ரன்களும் , 140 ஸ்ட்ரைக் ரெட்டுடன் இரண்டு அரை சதங்களையும் அடித்துள்ளார் விராட் கோலி. இருந்த போதிலும் கூட பெங்களூரு அணியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்த நிலையில் தான் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் விராட் கோலிக்கு அறிவுரை கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் : விராட் கோலி நம்பிக்கையுடன் தனது நல்ல தொடக்கத்துடன் தொடர்ந்து செல்கிறார், ஏனென்றால் RCB க்கு மிடில் ஓவர்களில் நிலையாக நின்று விளையாடும் ஒரு நபர் தேவை. அதற்கு விராட் கோலி முதல் ஆறு ஓவர்களை கடக்க வேண்டும். இறுதியில் அவர் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன்.
ஃபாஃப் அதிக ரிஸ்க் எடுக்கட்டும், ஆனால் விராட், நீங்கள் 6-15 ஓவர்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான் பெங்களூரு அனைத்து சிலிண்டர்களில் இருந்தும் தோட்டக்கலை சுடும். போட்டியிலும் உங்களினால் வெற்றிபெற முடியும். எனவே முதலில் அதைக் கவனியுங்கள் என்றார் டி வில்லியர்ஸ்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் : ஆர்சிபி அணிக்கு இது ஒரு மோசமான தொடக்கம் இல்லை, ஆனால் சிறப்பாகவும் இல்லை. இது நடுவில் உள்ளது. அவர்களுக்கு இரண்டு வெற்றிகள் தேவை. அவர்கள் சின்னசாமிக்கு திரும்பி வருவதற்கு முன்பு வீட்டை விட்டு ஒரு நல்ல அதிர்ஷ்டத்தைக் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன் என்று டி வில்லியர்ஸ் மேலும் கூறினார்.




