உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது நடுப்பகுதியில் இருந்து வருகிறது. ஏற்கனவே பல போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது ஆர்சிபி அணி இதனால் புள்ளிபட்டியலில் அவர்கள் 9வது இடத்தில் இருக்கின்றனர். என்னதான் ஆர்சிபி அணியின் நிருவாகம் பல மாற்றங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தாலும் அவர்களுக்கு கோப்பை என்பது கனவாகவே இருந்து வருகிறது.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஆர்சிபி அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக செயல்படவில்லை. குறிப்பிடத்தக்க வகையில் விராட் மட்டுமே தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த போட்டியில் கூட ராஜஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்தார் விராட். ஆனால் அந்த போட்டியில் ராஜஸ்தானை அணி வென்றது. இதனால் இந்த போட்டிக்கு விராட் கோலியின் மெதுவான ஆட்டமே காரணம் என்று பலரும் கூறிவந்தனர்.
சொல்லப்போனால் விராட் அந்த போட்டியில் விக்கெட்டுகள் விழுகாமல் இருக்கவும் ரன்ரேட்டை உயர்த்தவும் பொறுமையாக விளையாடினார். அப்போது விராட் 72 பந்துகளில் 113 ரன்களை விளாசி தனி ஒருவனாக போராடினார். இருந்த போதிலும் விராட் கோலியை பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் தான் விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் பேசுகையில் “மெதுவான சதம் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் போட்டியின் நிலைமை பற்றி யோசிக்க வேண்டும். ஸ்கோர், ஸ்ட்ரைக் ரேட் ஆகியவற்றை உணர்ந்து கொள்ள வேண்டும். விராட் கோலியைப் பற்றி பேசினால் அவர்களின் செய்திகள் பிரபலமாகிவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
நான் உங்களுக்கு விராட்டின் புள்ளிவிவரங்களை அனுப்பியுள்ளேன். அவரது ஸ்ட்ரைக் ரேட் மற்றும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கான நாக் அவுட் போட்டிகளில் ரன்களின் சதவீதத்தை நீங்கள் பார்க்க வேண்டும். அவர்களுக்கு கிரிக்கெட் பற்றி எந்த அறிவும் இல்லை. மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தன, ஆனால் இன்னும் விரட்ட தொடர்ந்து 135 ஸ்டிரைக் ரேட்டில் அடித்தார்.

மேலும் விராட் கோலி பற்றி பேசிய பிரைன் லாரா கூறுகையில் “ஸ்டிரைக் ரேட் நிலையைப் பொறுத்தது, மேலும் 130-140 என்ற ஓப்பனர் ஸ்ட்ரைக்-ரேட் நன்றாக இருக்கும். ஆனால் நீங்கள் மிடில் ஆர்டரில் வருகிறீர்கள் என்றால் நீங்கள் 150 அல்லது 160 இல் அடிக்க வேண்டியிருக்கும். நீங்கள் பார்த்தது போல் இந்த ஐபிஎல் தொடரில் பல அணிகளில் உள்ள பேட்ஸ்மேன்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அடிக்கிறார்கள் என்றார் பிரையன் லாரா.





