உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.

கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் இவர் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரன் மெஷின் என்று பாராட்டும் அளவிற்கு பல சாத்தனைகளை படைத்து வருகிறார். கடந்த வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் கூட தன்னுடைய 500வது சர்வதேச போட்டியை விளையாடி 500வது போட்டியில் 76வது சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். .
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா மழை காரணமாக 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்தாக இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோத வருகிறது. மேலும் இந்த போட்டியில் விராட் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மகத்தான ஒரு சாதனை படைக்க இன்னமும் 102 ரன்கள் மட்டுமே தேவை.

அதாவது விராட் தற்போது ஒருநாள் போட்டியில் 12,898 ரன்களை எடுத்துள்ளார். எனவே வரும் ஒருநாள் போட்டியில் விராட் முதல் போட்டியிலேயே சதம் அடிக்கும் பட்சத்தில் குறைவாக இன்னிங்கில் சர்வதேச ஒருநாள் போட்டியில் 13,000 ரன்களை எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைப்பார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் கிரிக்ட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் 5வது இடத்தில் இருக்கிறார்.
Virat Kohli funny gesture towards Hardik Pandya😂❤️
— Rohan Gangta (@rohan_gangta) July 27, 2023
I love this duo🥰 pic.twitter.com/1IaBRSdpPS
இப்படிபட்ட நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு முன்னதாக பயிற்சி ஹர்திக் பாண்டியவுடன் பேட்டிங் பயிற்சியில் இருந்தார் விராட் கோலி. அப்போது ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை பளார் என்று விராட் அடிக்க ஹர்திக் பாண்டிய விராட் கோலியை சிறிது நேரம் பார்த்தார். அப்போதுதான் விராட் கோலி திடீரென நடனமாடிக்கொண்டே பவுண்ட்டரி போல சைகை செய்தார். இந்த வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இன்று நடந்து வரும் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டியில் இந்திய டாஸை வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது தாக்குபிடித்தலும், அதற்கு பிறகு விக்கெட்டுகள் மளமள விழுந்தது. மேலும் இந்த செய்தியை எழுதும் வரையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 18 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.




