இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான கட்டுப்பாட்டு வாரியம் BCCI ஜூலை 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சீனாவின் ஹாங்க்சோவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பல காலம் கழித்து விளையாடுகிறது. 2023 க்கான ஆசிய விளையாட்டு போட்டிகளானது வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் ஆக்டோபர் 8ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய தன்னுடைய டி20 அணியை நேற்று அதிகார பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இந்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ராகுல் திரிபாதி, ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்)ஆகியோர் உள்ளனர். மேலும் இந்த தொடரின் மூலம் இந்திய அணியின் இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை காட்டுவதற்கு மிகவும் வசதியான ஒன்றாக இருக்கும்.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஆசிய விளையாட்டு போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாகவும் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணனும் இருக்கின்றனர் மேலும் பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பகதுலே, பீல்டிங் பயிற்சியாளராக முனீஸ் பாலி மற்றும் இவர்களது துணை பயிற்சி ஊழியர்களும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ஆண்கள் அணி போலவே ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான ஆசிய விளையாட்டு போட்டியில் விளையாடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக ஹிருஷிகேஷ் கனித்கர், பந்துவீச்சு பயிற்சியாளராக ராஜீவ் தத்தா, பீல்டிங் பயிற்சியாளராக சுபதீஷ் கோஷ் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணி முன்னதாகவும் வரும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் கேப்டனாக ரோஹித் சர்மா தலைமையிலும், ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியின் கீழும் அணியானது வழிநடத்தப்படும். மேலும் வரும் 30ஆம் தேதி துவங்கும் நிலையில் இந்திய அணி இலங்கை கண்டி மைதானத்தில் பாகிஸ்தான அணியை செப்டம்பர் இரண்டாம் தேதி சந்திக்க இருப்பது குறிப்பிடதக்கது.



