ஆசிய கிரிக்கெட்டின் பரம எதிரிகளாக திகழும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் இந்தியா கலந்து கொள்வது குறித்து கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பிரச்சனை வந்த நிலையில் வேறு வழியின்றி அந்த அணி பங்கேற்கும் போட்டிகளை அந்நாட்டில் நடத்துவதற்கு ஆசிய கவுன்சில் அனுமதி கொடுத்துள்ளது.

இந்நிலையில் தான் நேற்று இந்த போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியிருந்தது. 90களில் சச்சின் அடித்தால் தான் வெல்ல முடியும் என்ற சூழ்நிலையால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நிறைய வெற்றிகளை பெற்றுள்ளதை இப்போதும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ஆனாலும் 21ஆம் நூற்றாண்டில் தரமான அணியாக உருவெடுத்துள்ள இந்தியா கடந்த 20 வருடங்களில் பாகிஸ்தானை நிறைய முறை தோற்கடித்துள்ளது
அந்த வரிசையில் 1992 முதல் 50 ஓவர் உலகக் கோப்பையில் இதுவரை சந்தித்த 7 போட்டிகளிலும் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா இந்த முறையும் 2023 உலகக்கோப்பையிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் சவாலான இங்கிலாந்தில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வென்ற பாகிஸ்தான் 2021 டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக சரித்திர வெற்றி பெற்றது.

மேலும் 2022 ஆசிய கோப்பையிலும் லீக் சுற்றில் தோல்வியை பரிசளித்த நடப்பு சாம்பியன் இந்தியாவை முக்கியமான சூப்பர் 4 சுற்றில் பாஸ்கிதான் இந்தியாவை தோற்கடித்தது அந்த வகையில் தம்முடைய காலங்களில் பெரிய தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக தோல்விகளை சந்தித்தாலும் இப்போதைய பாகிஸ்தான் அணி அதை மாற்றி வெற்றிப் பாதையில் நடப்பதாக முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வக்கார் யூனிஸ் கூறியது :
போட்டியில் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் மிகவும் எளிமையாக விளையாட வேண்டும் என்பதே பாகிஸ்தான் அணிக்கு என்னுடைய அறிவுரையாகும். எங்களுடைய காலத்தில் இந்தியாவுக்கு எதிராக பெரிய தொடர்களில் தோல்வியடைந்தோம். ஆனால் தற்போதைய அணியில் உள்ள பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக சமீப காலங்களில் நடைபெற்ற பெரிய தொடர்களில் வெற்றி பெற துவங்கியுள்ளனர் என்பது நல்ல அறிகுறியாகும். வெற்றி எனும் குரங்கு தற்போது நமது பின் தவியுள்ளது.
எனவே திறமைக்கேற்றார் போல் விளையாடினால் இந்தியாவை இம்முறை ஏன் நம்மால் தோற்கடிக்க முடியாது என்பதற்காண காரணம் எனக்கு தெரியவில்லை. குறிப்பாக லண்டன் ஓவல் மைதானத்தில் விளையாடினாலும், இலங்கையில் விளையாடினாலும் நம்மால் அவர்களை கண்டிப்பாக தோற்கடிக்க முடியும். ஏனெனில் அதற்கான திறமை பஸ்கிஸ்தான் அணியிடம் இருக்கிறது. அதனால் பயமின்றி அழுத்தத்தை தூக்கி எறிந்து சிங்கத்தை போல் விளையாடினால் வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளார் வக்கார் யூனிஸ்.



