கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.

ஆனால் இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள அரசியல் பிரச்சனை காரணமாக பாஸ்கிதான் அணி இத்தாவிற்கோ அல்லது இந்திய அணி பாஸ்கிதான் சென்றோ விளையாடுவதில்லை. ஆனால் வரும் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியா வருகிறது. மேலும் உலக கோப்பை இந்த முறை முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினாலும் முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதினாலும் இந்தியா அணிக்கு மிகவும் அதிகமான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் முன்னாள் பாஸ்கிதான் அணியின் வீரரான வக்கார் யூனிஸ் பாஸ்கிதான் அணி இந்த உலக கோப்பையில் எப்படி செயல்படும் எனப்து குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “எங்களுடைய காலத்தில் அழுத்தம் இப்போது தோன்றுவது போல் பெரிய கவலையாக இல்லை. ஒரு அணிக்கு எதிராக நீங்கள் எவ்வளவு குறைவாக விளையாடுகிறீர்களோ, அதுவும் ஒரு பெரிய அணிக்கு எதிராக நீங்கள் அவர்களை விளையாடும் போதெல்லாம், குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் இந்தியாவாக இருந்தால், அழுத்தம் அபரிமிதமாகவும் மும்மடங்காகவும் இருக்கும்.

அழுத்தம் எப்பொழுதும் அதிகமாக இருக்கும் ஆனால் எங்களுடைய காலத்தில், இது ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது, ஏனென்றால் எனது ஆரம்ப நாட்களில் நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடினோம். ஆனால் மீண்டும், உலகக் கோப்பையில், நாங்கள் இந்தியாவுக்கு எதிராக மூச்சுத் திணறினோம். இருந்த போதிலும் இந்த நாட்களில் வீரர்கள் நிச்சயமாக அழுத்தத்தை சிறப்பாகக் கையாளுகிறார்கள்.

குறிப்பாக தற்போது அழுத்தத்தை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடக்கூட பேட்ஸ்மேன்கள் தற்போது இறுகின்றனர். பாகிஸ்தான் அணி சமீப காலமாக அழுத்தத்தை சிறப்பாக கையாண்டது. எனக்கு தெரிந்த வரையில் நீங்கள் எங்கு விளையாடினாலும், ஏன் இந்தியா அல்லது பாகிஸ்தானாக இருந்தாலும் சரி உங்கள் திட்டங்களை சரியாக வைத்து உங்கள் திறமைகளையும் போதுமான அளவு சிறப்பாகச் செயல்படுத்தினால் அழுத்தம் என்ற பிரச்சினை இருக்காது என்று நான் நினைக்கவில்லை.
எங்களிடம் தற்போது மேட்ச் வின்னர்கள் உள்ளனர், பாபர், ஷாஹீன், பாக்கார் உள்ளிட்டோர் போட்டிகளை ஒற்றைக் கையால் வெல்லக்கூடிய நபர்கள் எங்களிடம் உள்ளனர். நிச்சயமாக இமாம் சிறந்த இன்னிங்ஸ் விளையாடுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். எனவே ஆல் இன் ஆல் பாகிஸ்தான் எல்லா திறமைகளிலும் சிறப்பாக உள்ளது. இப்போது இந்த விஷயங்களை ஒன்றாக இணைத்து அழுத்தத்தைக் கையாள்வதில் தான் மீதி வெற்றி இருக்கிறது என்றார் வக்கார்.




