உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் 5 இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியும் 1௦ இடத்தில ஆப்கானிஸ்தான் அணியும் நேற்று சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்வது அவர்களுக்கு சாதகமாகவே அமைந்தது.

நீண்ட நாட்களாக தடுமாறி வந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் இந்த போட்டியில் அவருடைய சிறப்பான பேட்டிங்கின் மூலம் 50 ஓவர்களில் 282 ரன்களை குவித்தது. 283 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்தில் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவரிலே மாபெரும் வெற்றியை அடைந்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங் சிறப்பாக அமைந்தாலும் பௌலிங் மற்றும் பீல்டிங் சுமாராகத்தான் இருந்தது. அப்ரிடி மற்றும் ஹாசன் அலி தலா ஒரு விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தன. மேலும் வீரர்களின் உடல் தகுதி என்பது பலருக்கும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்களே பேசும் நிலையில் தான் முன்னாள் பாகிஸ்தான் அணியின் வீரர் வாசிம் அக்ரம் மிகவும் மோசமாக விமர்சித்தவர்.

அவர் பேசுகையில் ” இது சங்கடமாக இருக்கிறது. வெறும் 2 விக்கெட்டுகள், 280-290 என்பது பெரிய ஸ்கோர். மைதானம் என்பது அங்கு ஈரமாக இல்லை. அவர்களின் பீல்டிங் உடல் தகுதியை பார்க்க வேண்டும். அவர்கள் கடந்த 2,3 வாரங்களாக கொஞ்சம்தடுமாறுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக நான் வீரர்களின் தனிப்பட்ட பெயர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள். அவர்கள் தினமும் 8 கிலோ ஆட்டிறைச்சி சாப்பிடுவது போல் தெரிகிறது

சோதனைகள் என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக நீங்கள் உங்கள் நாட்டிற்காக விளையாடுகிறீர்கள், உங்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. மிஸ்பா பயிற்சியாளராக இருந்தபோது அவருக்கு அந்த அளவுகோல் இருந்தது. ஆனால் வீரர்கள் அவரை வெறுத்தனர். இருந்த போதிலும் அது அணிக்கு வேலை செய்தது. ஃபீல்டிங் என்பது உடற்தகுதியைப் பற்றியது, அது களத்தில் வெளிப்படுகிறது.
இப்போது நாங்கள் ஒரு கட்டத்திற்கு வந்துவிட்டோம். இவையெல்லாம் மாற வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை தான் செய்ய வேண்டும். மற்ற அணிகள் தோல்வியடையும் வரை காத்திருப்போம், பின்னர் நாங்கள் அரையிறுதிக்கு வர வாய்ப்பிருக்கும் என்று பாகிஸ்தான் அணியின் வீரர்களை கடுமையாக சாட்டியுள்ளார் வாசிம் அக்ரம்.




