அப்ரிடி பும்ராவை பார்த்து கற்று கொள்ளவேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் கூறியுள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.

இதனால் இந்திய அணி நல்ல உற்சாகத்துடன் இந்த தொடரில் ஆடி வருகிறது. அதே போல் இந்திய விளையாடாத போட்டிகளில் கூட்டம் குறைவாக வருவதையும் காணலாம். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் சில தினங்களுக்குமுன் நடைபெற்று இருந்தது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.

30.3 ஓவரிலேயே இந்த எளிய இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது.இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகம் மைதானத்தில் இருந்தனர். போட்டியின் இடையே இந்திய ரசிகர்கள் சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டனர். இந்த செயலுக்கு கம்பீர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
வாசிம் அக்ரம் கூறியது:
இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறுகையில் அப்ரிடி பிட்னசில் ஏதும் பிரச்சனை இருக்கின்றதா என்பது தெரியவில்லை.ஆனால் பந்து வீச்சில் ஒழுக்கம் சரியாக இல்லாமல் இருக்கின்றது. அவர் விக்கெட்டுகளை எடுப்பதற்காக அவர் முயற்சி செய்து வருகிறார் அவர் ஒவ்வொரு முறை வீசும் பந்து யாக்கர் வீசும் முயற்சிக்கும் போதெல்லாம் அதுவே அவருக்கு பின்னடைவாக மாறுகிறது. அப்படி யார்கர் வீசும் போது எல்லாம் பேட்ஸ்மேன் தயாராக இருந்து வருகிறார்கள். இந்திய அணியின் வீரர் பும்ராவை பாருங்கள் ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுக்கு முயற்சி செய்ய மாட்டார்.

அவர் பேட்ஸ்மேன்க்கு அழுத்தத்தை தருகிறார். அதன் பின் அவர் விக்கட்டுக்கு நோக்கி சரியான ஸ்டெம்b லைனில் பந்து வீசி விக்கெட்டுகளை எடுக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசி அழுத்தத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் விக்கெட்டுக்களையும் அவர் எடுத்துள்ளார். பாகிஸ்தான் அணி நசீம் ஷாவை அதிகமாக மிஸ் செய்கிறது. ஏனென்றால் நசீம் சா ரன்கள் அதிகமாக விட்டுக் கொடுக்காமல் வந்து வீரருக்கு அழுத்தத்தை கொடுப்பார். அவர் ஒரு முனையில் இருந்து அழுத்தத்தை கொடுக்கும் போது மற்றொரு மனதில் இருக்கும் வீரர் விக்கெட்டுகளை எடுப்பதற்கு எளிதாக இருக்கும் என்றும் அப்ரிடி பும்ரவை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்




