வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் அடுத்த 3 வது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆஷஸ் 5வது போட்டியானது கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை முடிவு செய்தது. இந்நிலையில் முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 283 ரன்கள் அடித்த நிலையில் இரண்டவது இன்னிங்கில் 295 ரன்களை அடித்தது ஆஸ்திரேலியா.

இதனை தொடர்ந்து இரண்டவது இன்னிங்கில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி 395 ரன்களை விளாசியது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்கை ஆடிய ஆஸ்திரேலியா அணி தொடக்கமே மிகவும் சிறப்பாக விளையாடியது. சொல்லபோனால் 135 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஒரு விக்கெட் கூட விழவில்லை. இந்நிலையில் சிறிது நேரம் கழித்து திடீரென 37வது ஓவரில் உஸ்மான் கவாஜாவின் ஹெல்மெட்டைல் பந்து படத்தினால் பந்து கொஞ்சம் சேதப்பட்டதாக அம்பயர்கள் பந்தை மாற்றினார்கள்.
இதனால் மீண்டும் புதிய பந்தன் சில மாற்றங்களுடன் மீண்டும் வழங்கப்பட்டது, இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஏனென்றால் இதற்கு பிறகு மூன்று விக்கெட்டுகள் இங்கிலந்து அணிக்கு கிடைத்தது. இது இந்தப்போட்டியின் மிகப்பெரிய தருமணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த விஷயம் குறித்து ரக்கி பாண்டிங் மிகவும் கடுமையான பதிலை கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில் “அந்த பந்து பழைய பந்தை விடமும் மிகவும் புதிதாக தெரிந்தது. அந்த பந்தின் பக்கத்தில் எவ்வளவு எழுத்து இருக்கிறது என்று பாருங்கள். இது பழைய பந்திக்கு புதிய பந்திற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம். இரண்டு டியூக்ஸ் பந்துகளின் நிலைமைகளுக்கு மிகப்பெரிய வித்தியாசம். இதற்கு முன்பு பலமுறை பந்துகளில் மாற்றம் செய்த இரண்டு சர்வதேச நடுவர்கள் அதை எப்படி தவறாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
"There's no way in the world you can look at those two balls there and say in any way that they're comparable" 😤
— Sky Sports Cricket (@SkyCricket) July 31, 2023
Ricky Ponting is NOT happy with that 'new' ball 😳 pic.twitter.com/maDFpv8RhM
இன்று தொடக்கத்தில் சிறப்பான நிலைமைகள் இருந்தன ஆனால் அந்த பந்தை பற்றிய பிறகு அது என்ன செய்யுமோ அதனை செய்தது. ஸ்விங் மற்றும் வேகம் நன்றாக இருந்தது. இந்த பந்து மற்றம் இந்த விளையாட்டில் இது ஒரு பெரிய தருணம், சொல்லப்போனால் டெஸ்ட் போட்டியில் ஒரு பெரிய தருணம். உண்மையில் இது கடுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று ஆவேசமாக கூறினார் ரிக்கி பாண்டிங்




