உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 40வது போட்டியை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் குஜரத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த இரு அணிகளும் இதற்க்கு முன் மோதிய போட்டியில் டெல்லி அணி தான் வெற்றி பெற்று இருந்தது. அது மட்டும் அல்லாமல் இந்த இரு அணிகளும் புள்ளி பட்டியலில் கீழே தான் இருந்து வருகிறது. குஜராத் அணி 6வது இடத்திலும் டெல்லி அணி 8 வது இடத்திலும் இருந்து வந்தது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் பின் தான் அவருக்கு தெரிந்தது அது தவறான முடிவு என்று. ஆரம்பத்தில் குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து வந்தனர். ஆனால் அதன் பின் ரிஷப் பந்த் மற்றும் அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தனர். டெல்லி அணியின் பேட்டிங் ஒரு கட்டத்தில் 150 ரன்களை எட்டுமா? என்ற கேள்வி இருந்தாலும் அதை இந்த இரண்டு வீரர்களும் மாற்றி அமைத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்களை குவித்து இருந்தது. இவ்வளவு பெரிய இமாலய ரன்களை குவிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் பட்டேல் தான்.அதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 88 ரன்களையும் அக்சர் பட்டேல் 66 ரன்களையும் அடித்து இருந்தார். குஜரத் அணி சார்பில் வாரியார் 3 விக்கெட்டுகளையும் நூற் அகமது 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தார். குஜரத் அணியின் அனுபவம் வாய்ந்த வீரர் மோஹிட் ஷர்மா விக்கெட் ஏதும் எடுக்காமல் 73 ரன்களை அவர் விட்டு கொடுத்து இருந்தார்.

அதன் பின் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் வரை போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 65 ரன்களும் மில்லர் 55 ரன்களையும் அடித்து இருந்தார்.சாஹா 39 ரன்களை அவர் அடித்து இருந்தார். கேப்டன் தனது 100வது போட்டியில் 6 ரன்னிலே வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தை அவர் அளித்து இருந்தார்.டெல்லி அணி சார்பில் ரஷிக் 3 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் மற்றும் நோர்கிய அக்சர் படேல் மற்றும் முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்து இருந்தார். எனவே டெல்லி அணி 4 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.
இது குறித்து குல்தீப் யாதவ் கூறுகையில், இதில் வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த இரண்டு புள்ளிகளும் மிக முக்கியமானவை. அற்புதமான விளையாட்டு. நாங்கள் கடைசி ஓவருக்குச் சென்றபோது, அது மிகவும் இறுக்கமாக இருக்கும் என்று தெரிந்தது. எங்களிடம் ஒரு திட்டம் இருந்தது, டெவாடியா பேட்டிங்கிற்கு வந்தபோது பயிற்சியாளர் மற்றும் கேப்டன் என்னிடம் பந்துவீச சொன்னார்கள். அதிர்ஷ்டவசமாக அது பலனளித்தது. நீங்கள் பேட்ஸ்மேன்களைப் படித்து அவர்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

நாங்கள் நன்றாக பேட்டிங் செய்தோம், எனது லைன் மற்றும் லென்த் கவனம் செலுத்தி, பேட்டர்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதைப் பார்த்தேன். (தேவாடியாவின் விக்கெட்டில்) நான் அவருக்கு விக்கெட்டுக்குள் சில பந்துகளை வீசினேன், அவர் ஸ்லாக்-ஸ்வீப் செய்யலாம் என்று நினைத்தேன் அது எங்கள் கீப்பரின் நல்ல திட்டம், எங்களுக்கு விக்கெட் கிடைத்தது என்றும் அவர் கூறினார்.





