இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 36வது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இது கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பௌலிங் செய்ய முடிவு செய்தார். முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க அட்டகாரர்கள் ஜெகதிசன் மற்றும் ராய் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தையே குடுத்தனர்.

ராய் 22 பந்துகளில் அவருடைய அரை சதத்தை அடைந்தார், 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்களை குவித்துவந்தனர். இந்நிலையில் 27 ரன்களில் ஜெகதிசன் அவுட்டாகி வெளியேற, அதன் பின்னரே ராய் 56 ரன்களில் வெளியேறினார். பெங்களூரு அணியின் பௌலர்கள் அதன் பின் சிறப்பாகவே செயல்பட்டு கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்களை திணற வைத்து வந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது கொல்கத்தா அணி.
வெற்றிபெற்ற KKR :
201 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கோலி மற்றும் டு ப்ளசிஸ் முதலில் அதிரடியான ஆட்டத்தை ஆரம்பித்தனர், ஆனால் டு ப்ளசிஸ் 17 ரன்களில் வெளியேற களம் கண்ட மேக்ஸ்வெல் நிலைத்து நிற்க முடியாமல் சுழலில் சிக்கி விக்கெட்டை இழக்க பெங்களூரு அணி தொடர்ந்து தடுமாற்றத்தையே சந்தித்தது. ஆனாலும் கேப்டன் கோலி நிதானமாகவே விளையாடி அணியின் வெற்றிக்கு போராடி வந்தார். இருந்த போதிலும் 20 ஓவர்கள் முடிவில் ரன்களை 179 மட்டுமே எடுக்க முடிந்தது. 21ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அற்புதமான வெற்றி பெற்றது.

விராட் பேசியது :
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய கோலி தங்களுடைய தோல்விக்கு காரணத்தை கூறினார். அவர் கூறுகையில் “உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் நாங்களே அவர்களது கைகளில் வெற்றியை கொடுத்துவிட்டோம். இந்த தோல்விக்கு நாங்கள் தகுதியானர்வர்கள் தான். எங்களுடைய அணி வீரர்கள் அனுபவம் வாய்ந்த வீரர்களாக இந்த போட்டியில் விளையாடவில்லை. இந்த போட்டியில் எங்களுடைய சில நல்ல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் 25-30 ரன்கள் அதிகமாக சென்றது.

விக்கெட் எடுக்காத பந்துகள் தான் பீல்டர்களுடம் சென்றது, அதுதான் இந்த அதிக ஸ்கோருக்கு காரணம். அதே போல இலக்கை துரத்தும்போதும் விக்கெட்டுகளை இழந்தாலும் நாங்கள் ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. சுலபமான பந்துகளை விளாச வேண்டும் அதற்கு ஒரு தூண்டுகோலும் தேவைப்பட்டது. ஒரு போட்டியில் வெற்றியடைந்துள்ளோம் ஒரு போட்டியில் தோல்வியடைந்துளோம். இது எங்களுக்கு பதர்ட்டத்தை ஏற்படுத்தும் விஷயம் கிடையாது. இன்னும் சில வெற்றிகளை பெற்று இந்த தொடரின் இறுதிக்கு தயாராக இருப்போம் என்றார் கோலி.





