உங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்ற முடிவடைகிறது. இன்றைய கடைசி போட்டியில் நெதர்லாந்து அணியும் இந்திய அணியும் பலப்பரிட்சை செய்தது. இதில் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மட்டுமல்லாமல் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று அடுத்த 15ஆம் தேதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

நெதர்லாந்து அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபி போட்டிக்கு தகுதி பெரும் என்ற நம்பிக்கையில் நெதர்லாந்து அணி களம் இறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடிய 50 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழுந்து 410 ரண்களை குவித்து இருந்தனர்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் மற்றும் கில் இந்திய அணிக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்து தந்தனர். சுப்மான் கில் 32 பந்துகளில் 51 ரன்கள் இருந்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 61 ரன்கள் இருந்த நிலையில் அவர் மற்றும் வெளியேறினார். அதுபோல அதன் பிறகு வந்த இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி நிதானமாக விளையாடி 56 பந்துகளில் 51 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு ரன்களை குவிக்க உதவினார்.

அதன் பின் வந்த ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து அணிக்கு நல்ல பாட்டன்ஷிப் அமைத்து பெரிய இலக்கிற்கு உதவினர். 84 பந்துகளில் தனது உலகக்கோப்பை முதல் சதத்தை பூர்த்தி செய்தார் ஷ்ரேயஸ் ஐயர். அதன் பின்பு அதிரடியை காட்டதொடங்கிய கே.எல் ராகுல் சதத்தை பூர்த்தி செய்தார் 102 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஷ்ரேயஸ் ஐயர் 128ரன்களையும் குவித்து இருந்தார். எனவே இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 410 ரன்களை குவித்தனர். நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் லீட் 2 விக்கெட்டுகளையும் மீக்ரம் மற்றும் ரோலோஃப் வான் டெர் மெர்வே தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.
411 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய நெதர்லாந்து அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக விளையாடி இருந்தது. இருப்பினும் நெதலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நெதர்லாந்து அணியின் அதிகபட்சமாக தேஜா நிடமானுரு 54 ரன்களும் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 45ரன்களும் கொலின் அக்கர்மேன் 35 ரன்களையும் அடித்து இருந்தனர்.
இந்திய அணி சார்பில் பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும் கோலி மற்றும் ரோஹித் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி நெதர்லாந்து அணியை 250ரன்னில் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றது. 9 வருடங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் விக்கெட்டை பதிவு செய்துள்ளார் விராட் கோலி.இந்த போட்டியில் அவர் 3 ஓவர்களை வீசிய நிலையில் நெதர்லாந்து அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். அவரது எக்னாமி 4.33.மேலும் அவர் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே வழங்கி இருந்தார். வெற்றி குறித்து பேசிய ரோஹித் ஷர்மா கூறுகையில்,

நாங்கள் இந்த உலக கோப்பை தொடங்கிய போது ஒவ்வொரு போட்டியாக தான் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.இது நீண்ட தொடர் என்பதால் நாங்கள் முன்னோக்கி எதையும் சிந்திக்க நாங்கள் விரும்பவில்லை. ஒரு விளையாட்டில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தி வந்தோம். ஏனென்றால் ஒவ்வொரு போட்டி நிலைமைகள் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் மிக சிறப்பாக விளையாடிய வெற்றி பெற வைத்திருக்கின்றார்கள். இது அணிக்கும் மிகவும் நல்ல அறிகுறி. இங்குள்ள நிலைமையில் எங்களுக்கு தெரிந்ததும்.
அதனால் தான் நாங்கள் வெவ்வேறு அணிகளுடன் விளையாட போது அதற்கு ஏற்றார்போல் விளையாடினோம். நாங்கள் முதல் நான்கு போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்து வந்தோம் அதன்பின் நடந்த அனைத்து போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்தோம. அணியை கலகலப்பாக வைத்திருக்க நான் விரும்பினேன். ஒவ்வொரு போட்டியும் களத்தில் நாங்கள் வேடிக்கையாக விளையாடி. இதன்று எங்களுக்கு 9 பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். மிக மிகவும் ஒரு முக்கியமான விஷயம். எனக்கு பந்துவீச்சாளர்கள் வைடு வீச வேண்டி இருந்தது அதற்கு மாறாக இருந்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்தி வந்தோம். என்றும் அவர் கூறினார்.



