நாங்க இந்த ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் போட்டியை வென்று விடுவோம் இந்தியா – இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று, 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில், புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, தொடரில் முன்னிலை பெற இரு அணிகளுக்கும் இடையே கடும் போராட்டத்தை உருவாக்கி வருகிறது.

போட்டி சுருக்கம்.
இரண்டாவது இன்னிங்ஸ் – இந்தியா (நாள் 4 முடிவில்): 193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (0), கருண் நாயர் (14), கேப்டன் ஷுப்மன் கில் (6) மற்றும் இரவுக்காவலர் ஆகாஷ் தீப் (0) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கே.எல். ராகுல் 33 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்தியா வெற்றி பெற இன்னும் 135 ரன்கள் தேவை, கையில் 6 விக்கெட்டுகள் உள்ளன.
வெற்றி குறித்து பேசிய சுந்தர்
நான்காம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வாஷிங்டன் சுந்தர், “நிச்சயமாக இந்தியா நாளை (திங்கட்கிழமை) வெற்றி பெறும், ஒருவேளை முதல் அமர்விலேயே. மதிய உணவுக்குப் பிறகு ஒருவேளை வென்று இருப்போம்” என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தெரிவித்தார்.நாங்கள் இப்போது இருக்கும் நிலையில், நாங்கள் இதை நிச்சயமாக ஏற்றுக்கொள்வோம். ஒருவேளை, இன்று ஸ்டம்புகளில் ஒரு விக்கெட் விழாமல் இருந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

தனது பந்துவீச்சு செயல்திறன் குறித்து பேசிய சுந்தர், “இது எனது பந்துவீச்சில் சிறந்த நாட்களில் ஒன்றாகும், குறிப்பாக இந்தியாவிற்கு வெளியே. ஆனால் ஆம், இந்த டெஸ்ட் போட்டிக்கு வரும்போதே எனக்கு சில திடமான திட்டங்கள் இருந்தன, முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் இரண்டிலும் அவற்றை செயல்படுத்த விரும்பினேன், களத்தில் இரு அணி வீரர்கள் மத்தியிலும் எப்போதும் ஒரு ஆக்ரோஷம் இருக்கும்” என்று கூறி, போட்டியின் தீவிரத்தையும் வெளிப்படுத்தினார்.
இன்றைய இறுதி நாள் பரபரப்பு
ஐந்தாம் நாள் ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளர் மார்கஸ் டிரெஸ்கோதிக், “நாளை (இன்று) முதல் ஒரு மணி நேரத்தில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்துவோம் என்று நம்புகிறோம்” என்று கூறி இங்கிலாந்தின் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
Washington Sundar hopeful of pulling off a win in the third Test at Lord’s 👊🏏
— TOI Sports (@toisports) July 14, 2025
Watch the full video: https://t.co/iyBrWXxe30#WashingtonSundar #INDvsENG #LordsTest #TeamIndia pic.twitter.com/oKK4tsIl6q
ஒருபுறம் கே.எல். ராகுல் நிலையாக களத்தில் நிற்க, மறுபுறம் அனுபவமுள்ள பேட்ஸ்மேன்கள் வரிசையில் உள்ளனர். வாஷிங்டன் சுந்தரின் கணிப்பு பலிக்குமா, அல்லது இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இந்தியாவை தடுமாறச் செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும், சுந்தரின் இந்த நம்பிக்கை, இந்திய அணியின் வெற்றிக்கு அவசியமான மன உறுதியையும், உத்வேகத்தையும் பிரதிபலிக்கிறது.





