ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகள் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக கிரிக்கெட் பிரியர்களை உற்சாகப்படுத்திய ஐபிஎல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரவு 07.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கேப்டனாக பல வெற்றிகளைப் பெற்ற தோனியின் தலைமையிலான சென்னை அணி பத்தாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி 5 வது முறையாக கோப்பையை கைப்பற்றி மும்பை அணியின் சாதனையை சாம் செய்யும். அதற்க்கு மாற்றாக குஜராத் அணி வெற்றி பெற்றால் தொடர்ந்து 2 முறை கோப்பையை வென்று பலமான அணியாக இனி வரும் காலங்களில் திகழும்.
இந்த பின்னணியில், சென்னை சூப்பர் கிங்ஸின் முக்கிய பந்துவீச்சாளர் தீபக் சாஹர் சமீபத்தில் தனது அணித் தலைவர் எம்எஸ் தோனியைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான உண்மையை வெளிப்படுத்தினார். தீபக் சாஹர் ஒரு பேட்டியில் தோனி விளையாட்டில் எவ்வளவு தீவிரமானவர் என்று கூறினார். “2021 ஐபிஎல் இறுதிப் போட்டிக்குப் பிறகு என் காதலி ஜெயாவிடம் காதலை முன்மொழிய விரும்பினேன். இதையே எங்கள் அணி கேப்டன் தோனியிடம் நகைச்சுவையாக கூறினேன். அப்போது தோனி ஒரு அறிவுரை கூறினார்.

இறுதிப் போட்டி வரை காத்திருக்காமல் ப்ளே ஆஃப் போட்டிக்கு முன் காதலை தெரிவித்து விடு என்றார்.இறுதிப் போட்டிக்கு முன்னரே காதலை தெரிவித்தால் உன்னால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியும் என்றார். இல்லையெனில் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியாது என்று கூறினார். அது எனக்கு சரியென உணர்ந்தேன்,” என்று சாஹர் வெளிப்படுத்தினார். 2021ம் ஆண்டு துபாயில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான சென்னையின் ஆட்டத்திற்குப் பிறகு சாஹர் ஜெயாவிடம் முன்மொழிந்தார்.

சாஹரின் முன்மொழிவை ஜெயா ஏற்று கொண்டார். சென்னை அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களின் முன்னிலையில் இருவரும் மோதிரங்களை மாற்றிக்கொண்டனர் என்றும் அவர் நினைவு கூர்ந்தார். இருவரும் ஜூன் 2022 இல் திருமணம் செய்து கொண்டனர்.





