உலகெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் விளையாடுவதற்கு விருப்பமாக இருப்பார்கள். இது வணிக ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் விளையாடும் விளையாட்டு ஆகும். இந்த லீக் தொடரிலிருந்து முக்கிய அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.

அவர் 2013 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்ற பின் 2015, 17, 19 மற்றும் 20 ஆண்டுகளில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மும்பை அணியானது டிரேடிங் மூலம் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்தது. இது மும்பை அணி ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு பிறகு அவரை கேப்டன் சியில்ல் அமர வைப்பதற்கான திட்டம் என்று பலர் கூறி வந்தனர்.
ஆனால் தற்போது மும்பை அணி ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியில் இருந்து விலகி ஹர்திக்பாண்டியாவை கேப்டன் ஷிப் பதவியை கொடுத்துள்ளது. ரோஹித் சாரமா கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாகவே மும்பை அணி நிர்வாகம் தற்பொழுது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. கேப்டன் பகுதியில் ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கி உள்ளது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் 2024 மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அணியை வழி நடத்துவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் தற்போது மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் ரோகித் சர்மாவின் 10 வருட கேப்டன்ஷிப் முடிவுக்கு வந்துள்ளது இது தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, ரோகித் சர்மா இதுவரை மும்பை அணியின் கேப்டன் 158 போட்டிகளில் விளையாடி உள்ளார் அதில் 87 போட்டிகளில் வெற்றியும் 67 போட்டிகளில் தோல்வியும் நான்கு போட்டிகளில் ட்ராவிலும் முடித்துள்ளார். இந்த செய்தி தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்க்கான காரணம் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுன்சர் கூறியது தான்.
இது ஒரு முடிவு என்று நினைக்கிறேன். ஹர்திக்கை மீண்டும் ஒரு வீரராகப் பெற ஒரு விண்டோ பீரியட் பார்த்தோம். என்னைப் பொறுத்தவரை இது ஒரு மாறுதல் கட்டம். போட்டோ ஷூட்களும் இதுவும் அதுவும் இருக்கிறது. மற்றும் அதிக முக்கியத்துவம் உண்மையில் கிரிக்கெட்டில் இல்லை, அது விளம்பரம் மற்றும் அனைத்து வகையான விஷயங்களைப் பற்றியது.
ரோஹித் ஒரு இடத்திற்குச் செல்கிறார், பின்னர் கேமராக்கள் மட்டுமே உள்ளன, அவர் மிகவும் பிஸியாக இருக்கிறார், மேலும் அவர் பேட்களுடன் தாமதமாக சிறந்த இரண்டு சீசன்களைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர் ஒரு கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டார்.

ஒரு வேளை அவனது கடைசி வருடத்தில் அடியெடுத்து வைப்பதற்கு இதுவே சந்தர்ப்பம் என்று நினைத்தோம்.கேப்டனாக இருந்து அவரைப் பற்றிய கூடுதல் அழுத்தத்தை எடுத்துக் கொண்டால், ரோஹித் ஷர்மாவின் சிறந்த பலனை நாம் பெறலாம். மேலும் அவர் முகத்தில் நல்ல புன்னகையுடன் விளையாடுவதையும், அவரது அழகான குடும்பத்துடன் சிறிது நேரம் செலவழிப்பதையும் பார்க்கிறோம். அதைச் செய்வதற்கு எளிதான வழி இல்லை என்று நினைக்கிறேன் இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் அவர் பேசிய சேனல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது பேட்டியின் கீழ் “So many things wrong with this,” என ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே கமென்ட் செய்து இருந்தார். இதற்க்கான அர்த்தம் என்னவென்று பரத்தால் மார்க் பவுண்டசர் கூறியதற்கு “இதில் பல விஷயங்கள் தவறு” என்று அவர் பதிலளித்து இருந்தார்.





