ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்புவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று இந்திய அணியின் மூத்த வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். அதேநேரம், விரும்பினால் அல்லாஹு அக்பர் என்றும் மகிழ்ச்சியுடன் கூறுவேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.அயோத்தியில் ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். இதில் நாடு முழுவதும் பக்தர்கள் அயோத்தி கோவிலுக்கு வருகை தந்து இருந்தனர். அது மட்டும் அல்லாமல் பல முக்கிய பிரமுகர்களும் அதில் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் எதிரொலித்தது. நாடு முழுவதும் மெகா நிகழ்வை கொண்டாடிய நிலையில், சில தவறான சம்பவங்கள் சிலரிடையே கவலையை ஏற்படுத்தியது. இது குறித்து முகமது ஷமியிடம் ஒரு கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. இதற்க்கு அவர் பதில் கூறுகையில், ஒவ்வொரு மதத்திலும், எதிர் மதத்தைச் சேர்ந்த நபரை விரும்பாத 5 முதல் 10 நபர்களை நீங்கள் சந்திப்பீர்கள். அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

ராமர் கோவில் கட்டப்படுகிறது என்றால், ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வதில் என்ன பிரச்சனை? 1,000 முறை சொல்லுங்கள். நான் அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டுமென்றால் 1,000 தடவை சொல்வேன்… அது என்ன வித்தியாசம்?” என்றும் அவர் கூறினார். இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு சஜ்தா செய்ய பயப்படுவதாக கூற்று குறித்தும் அவர் கூறுகையில், “நான் தொடர்ச்சியாக ஐந்தாவது ஓவரை வீசினேன், நான் நினைக்கிறேன்,
என் திறனுக்கு அப்பாற்பட்ட முயற்சியுடன் பந்துவீசினேன். நான் களைப்படைந்திருந்தேன். பந்து அடிக்கடி எட்ஜ் அடித்துக் கொண்டிருந்தது, அதனால் நான் இறுதியாக அந்த ஐந்தாவது விக்கெட்டைப் பெற்றபோது, நான் முழங்காலில் இறங்கினேன். யாரோ என்னைத் தள்ளினார்கள், அதனால் நான் கொஞ்சம் முன்னேறினேன்.

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பரவியது. நான் சஜ்தா செய்ய வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள் ஆனால் செய்யவில்லை. அவர்களிடம் எனக்கு ஒரே ஒரு அறிவுரை மட்டுமே உள்ளது, தயவுசெய்து இதுபோன்ற தொல்லைகளை நிறுத்துங்கள்,” என்று வலது கை வேகப்பந்து வீச்சாளர் மேற்கோள் காட்டினார்.





