உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்ய அது சரியான முடிவாக சென்றது. லக்னோ அணியின் துவக்க பேட்ஸ்மேன்கள் முதல் இரண்டு ஓவர்களில் கொஞ்சம் நிதானமாக ஆடினாலும் 3வது ஓவரில் இருந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர்

இருந்த போதிலும் ராகுல் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க பின்னர் வந்த பேட்ஸ்மேன்களும் நிலைக்காமல் ஆட்டமிழந்தார். டீ காக் மட்மே பொறுமையாக விளையாடி அரை சதம் அடித்த போதிலும் அவரும் ஆட்டமிழக்க அதிரடியாக விளையாடிய பூராண் 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த குணால் பாண்டியா அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்த இறுதியில் லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை அடித்தது.
பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியபஞ்சாப் அணிக்கு தொடக்கம் அற்புதமாக இருந்தது. இதனை பார்த்த பலரும் பஞ்சாப் இன்று வெற்றியடையும் என்று நினைத்த போது பேர்ஸ்டோவின் விக்கெட் விழுந்தது. அது போட்டியின் திருப்புமுனையாக இருந்தது. பின்னர் வந்த பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பஞ்சாப். இந்த போட்டியில் மயங்க் யாதவ் சிறப்பாக விளையாடி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மயங்க் யாதவின் வேகம் மணிக்கு 150 கிலோ மீட்டருக்கு மேலே இருந்த காரணத்தினால் இவரின் மீது பலரின் பார்வையும் பட்டது. மேலும் இந்தியாவின் எதிர்கால வேகப்பந்து வீச்சாளராக வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக பல கிரிக்கெட் வல்லுநர்கள் கூறிவருகின்றனர். இந்தியாவின் தலைநகரான டெல்லியை சேர்ந்தவர் 21 வயதான வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ். மயங்க்யாதவ் உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லி அணியை பிரதிநிதித்தி இருந்தார்.
இதில் அவர் சிறப்பாக செயல்பட்டதால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். எல்லா வடிவங்களிலும் முழுவதும் ஒரு வேகப்பந்து வீச்சாளராக 51 விக்கெட்டுகளுடன் தனது திறனை வெளிப்படுத்தினார். இதுவே அவர் ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள காரணமாக இருந்தது. மேலும் சையத் முஷ்டாக் அலி கோப்பை மற்றும் ராஞ்சி கோப்பை போன்ற தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
ஐபிஎல்லில் அவரது விரைவான உயர்வு அவரது அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு ஒரு சான்றாகும், மேலும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான நம்பிக்கைக்குரிய வாய்ப்பாக அவரை நிலைநிறுத்துகிறது. தொடை காயம் மற்றும் தொடர்ச்சியான சில காயங்களின் காரணமாக முந்தைய சீசனைத் தவறவிட்டார் மயங்க் யாதவ். பின்னர் இந்த தொடர்ச்சியான பின்னடைவுகளுக்குப் பிறகு ஐபிஎல்லில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து.

ஐபிஎல் மற்றும் தொழில்முறை கிரிக்கெட்டில் அவருக்கு குறைந்த அனுபவம் இருந்தபோதிலும் யாதவ் தனது ஐபிஎல் அறிமுகத்தில் யாருமே மறக்கமுடியாத அடையாளத்தை ஏற்படுத்தியதால் அவரது திறமையை பலரும் உணர்ந்து கொண்டனர். மேலும் பஞ்சாப் அணிக்கு எதிராக அவர் எடுத்த விக்கெட்டுகளினால் வரும் விளையாட்டுகளில் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதே வேலையில் இவர் சரியாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணியில் கூட இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.




