ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டன்சியில் பிடிக்கவில்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியிருந்தார். இந்திய அணியானது அடுத்த வருடம் நடக்கவுள்ள உலக கோப்பை டி20 போட்டிக்கு தயாராகி வருகிறது. அதற்கு இந்திய வீரர்களை தயார் படுத்தும் முயற்சியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து தொடர்களை கொண்ட T20 போட்டியானது தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா அணி உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியிடம் வெற்றி பெற்று தற்போது இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது.

அதில் மூன்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணியும் கடைசியாக நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது. இதற்கு கேப்டனாக சூரிய குமார் யாதவ் இருந்து வருகிறார். இந்த தொடர் அடுத்து டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் இந்திய அணி அடுத்ததாக தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக சுற்றுப்பயணத்தில் விளையாட உள்ளது.
அதில் மூன்று டி20 போட்டிகளும் மூன்று ஒரு நாள் போட்டிகளும் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கு கேப்டனாக யார் செயல்படுவார்கள் என்று கேள்வி தற்போது அனைவரிடமும் எழுந்துள்ளது. ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணியின் டி20க்கு கேப்டனாக இருந்து வருகிறார். ஆனால் தற்போது அவர் காயமே ஏற்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியை இவ்வாறு வழி நடத்தி வருகிறார்.

இதன் காரணமாக ரோகித் ஷர்மாவை இந்திய அணியின் டி20 கேப்டன்சியை ஏற்குமாறு பிசிசிஐ அவரிடம் பேசி உள்ளதாக தகவல்கள் வெளியானது. கடந்த உலகக்கோப்பை t20க்கு பின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் எந்த ஒரு டி20 போட்டியில் விளையாடவில்லை. அதற்கான பிசிசிஐ எந்த ஒரு காரணமும் அளிக்கவில்லை. ஆனால் தற்பொழுது இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியேற்கச் சொல்லி பிசிசிஐ அவரிடம் சமாதானப்படுத்தி வருகிறது. ஏற்கனவே ரோகித் சர்மா வருடம் உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வி அடைந்ததால் சோகத்தில் இருக்கிறார். இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,
ரோஹித் சர்மா கேப்டன்சி விட்டு விட்டு செல்லும் விருப்பமான நிலையில் இருக்கின்றார் என்று தற்போது நினைக்கின்றேன். இல்லையென்றால் BCCI தரப்பில் எதற்காக ஒரு பேச வேண்டும். பிறகு சர்மா கேப்டன் பதவி வேண்டாம் என்று கூறிய காரணத்தினால் மட்டுமே BCCI அவரிடம் பேசி சமாதானப்படுத்தியுள்ளது.

இந்திய அணி t20 உலக கோப்பை தோல்விக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா எந்த ஒரு டி20 போட்டிகளிலும் விளையாடவில்லை. அது இன்று வரை மர்மமாகவே உள்ளது அந்த மர்மம் பற்றி யாரும் இதுவரை பேசவில்லை. இன்று மாலை தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கும் போது தான் அதில் தரோகித் சர்மா இருக்கிறாரா இல்லையா என்பது பெரிய வரும் என்றும் அவர் கூறியிருந்தார்.




