அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது இந்த வருடம் முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதற்கான அட்டவணை ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் தான் அதில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டுள்ளது ஐசிசி. அதாவது வரும் ஆக்டோபர் 15ஆம் தேதி நடக்க இருந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது அதற்கு முக்கியமான கரணம் 15ஆம் தேதி குஜராத்தில் நவராத்திரி கொண்டாடுவதால் பாதுகாப்பு காரணமாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா vs பாஸ்கிதான் போட்டியில் ஏற்பட்ட இந்த மாற்றத்தினால் அட்டவணையில் பெரிய சில மாற்றங்கள் குறிப்பிடதக்க வகையில் ஏற்பட்டுள்ளது. அதில் 2வது மாற்றமாக 14ஆம் தேதி டெல்லியில் நடக்க இருந்த இங்கிலாந்து vs ஆஃப்கானிஸ்தான் போட்டியானது 24 மணிநேரம் கழித்து அக்டோபர் 15ஆம் தேதி ஞாயற்று கிழமை நடிப்பெறுகிறது.
மூன்றவது மாற்றமாக நியூசிலாந்து vs வங்கா தேசம் போட்டியானது 14 ஆம் தேதி தான் இருந்தது, ஆனால் முந்தய போட்டிகளில் ஏற்பட்ட மற்றம் காரணமாக 14 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருந்த போட்டி 13ஆம் தேதி பகல்-இரவு போட்டியாக நடக்க இருக்கிறது
நான்காவது மாற்றமாக ஹைதராபத் மைதானத்தில் நடக்க இருந்த பாஸ்கிதான் vs இலங்கை போட்டியானது 12ஆம் தேதியில் இருந்து 10 ஆம் தேதி செவ்வாய் கிழமை மாற்றப்பட்டுள்ளது.
மேலும் 5வது மாற்றமாக ஆக்டோர் 12 ஆம் தேதி லக்னோ மைத்தனத்தில் நடக்க இருந்த அஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா போட்டியானது 24 மணிநேரம் கழித்து அக்டோபர் 13அம தேதி வெள்ளி கிழமை நடக்க இருக்கிறது.

மேலும் சில போட்டிகளில் போட்டி நடக்கும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது 6வது மாற்றமாக இங்கிலாந்து vs வங்காள தேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியானது தர்மசாலாவில் நடக்கும் போட்டி பகல்-இரவு போட்டியாக இருந்தது இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
7வது மற்றும் 8வது மாற்றமாக ஞாயற்று நடக்க இருக்கும் இரண்டு போட்டிகள் நடக்க இருக்கும் நிலையில் நவம்பர் மதம் 12ஆம் தேதி நடக்க இருந்த ஆஸ்திரேலியா vs வங்களா தேசம் போட்டியானது நவம்பர் மாதம் 11ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கும், கொல்கத்தாவில் 11ஆம் தேதி நடக்க இருந்த இங்கிலாந்து vs பாஸ்கிதான் போட்டியானது இந்திய நேரப்படி மதியம் 2.00 மணிக்கு தொடங்குகிறது.

9வது மாற்றமாக வரும் நவம்பர் மாதம் 11ஆம் தேதி பெங்களூரு மைத்தனத்தில் நடக்க இருந்த இந்தியா vs நெதர்லாந்து போட்டியானது 12 ஆம்த தேதி மாற்றப்பட்டு பகல்-இரவு போட்டியாக விளையாடப்படுகிறது. இந்த மாற்றங்கள் தற்போது அட்டவணையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் காலத்தில் இனமும் சில மாற்றங்கள் தேவைப்பட்டால் டிக்கெட் வழங்குவதற்கும் செய்யவேண்டும் என்பது குறிப்பிடதக்கது.




