ஐபிஎல் 2023 க்கான லீக் 45 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் மோதின. சென்னை அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் தீபக் சாஹார் சென்னை அணியில் இணைந்தார். லக்னோ அணியின் கேப்டன் ராகுல் இந்த போட்டியில்இருந்து விலகியதால் க்ருனால் பாண்டியா கேப்டனாக செயல் பட்டு வந்தார். மழையின்

காரணமாக சற்று தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இந்நிலையில் டாஸின் போது தோனி கூறிய விஷயம் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தோனி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அதனை தொடர்த்து இவரின் ஐபிஎல் ஓய்வு எப்போது என்ற கேள்வி எல தொடங்கியது.
அந்த கேள்விக்கு தோனியின் அவ்வபோது பதிலளிப்பார். ஆனால் இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்தே இதுதான் தோனியின் கட்சி சீசன் என்று பலரும் கூறி வருகின்றனர். அதற்கு தகுந்தாற் போலவே தோனியும் கொல்கத்தாவில் நடந்த போட்டியின் போது ரசிகர்கள் அதிக அளவு ஈடன் கார்டன் மைதானத்தில் வந்திருந்தனர். அப்போது பேசிய தோனி ரசிகர்கள் என்னை வழியனுப்ப வந்திருக்கிறார்கள் என்று கூறினார். இதனால் இந்த சீசன் தான் தோனியின் கடைசி சீசன் என்று வருத்தப்பட்டனர்.

தோனி கூறியது :
அப்படியொரு நிலையில் தான் இன்று நடக்கும் லக்னோ vs சென்னை போட்டி தொடங்கும் போது ஐபிஎல் வர்ணனையாளர் டேனி மோரிசன் தோனியுடன் உங்களுடைய கடைசி சீசனில் மகிழ்ச்சியாக விளையாடுகிறீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த தோனி “இது என்னுடைய கடைசி சீசன் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள் நான் சொல்லவில்லை என்று சிறிது முகத்துடன் கூறினார். அது டேனி மோரிசனை ஆச்சரியமடைந்து “அப்ப்டியென்றால் நீங்கள் கண்டிப்பாக காம்பேக் கொடுக்க போகிறீர்கள் என்று சிரித்தபடி கூறினார்.
MSD keeps everyone guessing 😉
— IndianPremierLeague (@IPL) May 3, 2023
The Lucknow crowd roars to @msdhoni's answer 🙌🏻#TATAIPL | #LSGvCSK | @msdhoni pic.twitter.com/rkdVq1H6QK
அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தோனி தன்னுடைய ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வமாக சொல்லாத நிலையில் தோனி இப்படி கூறியிருப்பது. என்னுடைய ஓய்வை நீங்களே முடித்து செய்து விட்டால் எப்படி என்பதனை போல உள்ளது. இதனால் அடுத்த வருடமும் தோனி சென்னையில் சிக்ஸர்களை பறக்க விடுவார் என்கிற நம்பிக்கை ரசிகர்கள் மனதில் வந்துள்ளது.





