உலக கிரிக்கெட்டில் கடவுள் என்றழைக்கப்படுபவர் இந்தியாவை சேர்ந்த சச்சின் டெண்டுல்கர். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தன்னுடைய அப்பாவை போலவே கிரிக்கெட் மீது பெரும் ஈடுபாடு கொண்டபவர். சிறு வயதில் இருந்தே பல போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். பொதுவாக ஒரு பிரபலம் என்றால் அவரது மகனும் அனைவருக்கும் தெரிந்தவராகத்தான் இருப்பார்கள்.

அதுவும் ஒரு கிரிக்கெட் வீரரின் மகன் கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால் அந்த மகனுக்கு தன்னுடைய அப்பா பல காலம் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கிய நம்பிக்கையை சீர்குலைக்காமல் இருக்க வேண்டும். அதையேதான் அர்ஜுன் டெண்டுல்கரும் சிறப்பாக செய்து வந்தார். ஆனால் இந்த ஐபிஎல் போட்டிக்கு முன்னர் நடந்த ஒரு போட்டியில் கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் இறுதியாக கடந்த 2023 ஐபிஎல் சீசனில் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் இந்த வாய்ப்பு அர்ஜுன் டெண்டுல்கருக்கு கொஞ்சம் மோசமான அனுபவமாகவே இருந்தது. குறிப்பிடத்தக்க வகையில் ஐபிஎல் போட்டியில் 4 போட்டிகள் மட்டுமே விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். அதே போன்று ஒரு போட்டியில் ஒரு ஓவரில் மட்டும் 31 ரன்களை விட்டு கொடுத்தார். இதனால் அர்ஜுன் டெண்டுல்கர் மீது பல விதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

ஐபிஎல் போட்டி முடிவடைந்த நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் மீண்டும் உள்ளூர் போட்டிகளுக்கு திரும்பியிருந்தார். இந்த நிலையில் தான் தற்போது அர்ஜுன் டெண்டுல்கர் தியோதார் டிராபி போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் தென் மண்டலா அணிகக்க அர்ஜுன் டெண்டுலகர் வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தான் அர்ஜுன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
அந்தவீடியோவில் அர்ஜுன் டெண்டுல்கர் பவுன்சர் பந்துவீச வீச அது நேரடியாக பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கைகளில் சென்று அமர்ந்து கொண்டது. இந்த விடியோவை தான் அர்ஜுன் டெண்டுல்கர் பகிர்ந்துள்ள நிலையில் அந்த பதிவில் கில் அதிரடியா நாயகன் யுவராஜ் சிங் வெடிகுண்டு எமோஜி ஒன்றை பகிந்துள்ளார். இதனை மூலம் அர்ஜூண்டெடுல்கரை யுவராஜ் சிங் பாராட்டுகிறார் என்று தெரிகிறது.





