ஐபிஎல் தொடரில் மிகவும் வலிமையான அணிகளில் ஓன்று ஆர்சிபி. இதில் கிறிஸ் கெய்ல், விராட் கோலிம், ஏ பி டி, தினேஷ் கார்த்திக் போன்ற பல திறமையான வீரர்கள் இருந்தும் இந்த அணியினால் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட வெல்ல முடியவில்லை. அதுவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகள் செய்த விராட் கோலி கேப்டனாக ஆர்சிபி அணிக்கு பல காலம் இருந்து வெற்றி என்பது இனமும் ஆர்சிபி ரசிகர்களுக்கு கனவாகத்தான் இருந்தது வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய யுஸ்வேந்திர சாஹலிடம் ஆர்சிபி ஏன் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில் “நான் அதற்கான காரணத்தை தான் வருடங்களாக கண்டுபிடிக்க முயற்சி செய்தேன். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த இப்றல் கோப்பையில் எங்களுக்கு வெற்றிபெற சிறந்த வாய்ப்புகள் இருந்தது. கிறிஸ் கெயில் மற்றும் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் நாங்கள் பைனல் போட்டியில் தோற்று விட்டோம்.
எங்களுடைய அணியானது 7 போட்டிகளில் 6 போட்டிகளை வென்று விட்டோம். எனக்கு நீல நிற தொப்பியானது குவாலிபயர் ம்போட்டியில் டெல்லிக்கு எதிராக கிடைத்தது. இரண்டு நாட்களுக்கு மட்டும் தான். நாம் தோற்றால் முதல் 4 இடங்களுக்கு வெளியே இருப்போம், வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்தைப் பெறுவோம் என்பது எங்களுக்கு சமன்பாடாக அமைந்தது. நாங்கள் குவாலிபர்ஸ் போட்டியில் வெற்றி பெற்று பைனலுக்கு சென்றோம்.

அதுவும் சின்னசாமி மைத்தனத்தில் வெறும் 8 – 10 ரன்களில் தோல்வியை தழுவியது எங்களுக்கு மிகவும் கடினமாக ஒன்றாக இருந்தது. நாங்கள் அடுத்த ஆண்டு வித்தியாசமாக என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி நாங்கள் பேசினோம். ஓன்று கிரிக்ட்டில் நல்ல கிரிக்கெட்டை விளையாடி பின்னர் தோன்றல் கூட அது மோசமாக பாதிக்காது. மற்றொன்று தொடக்கத்தில் இருந்தே தோல்வியி தழுவுவது என்றார்.

மேலும் பேசிய சாஹல் நாங்கள் 6 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவினாலும் 7 வது போட்டியில் வெற்றி பெரும் பட்சத்தில் ஐபிஎல் கோப்பையையே வென்றது போன்ற மகிழ்ச்சியில் கொண்டாடுவோம். இந்த முறை ராஜஸ்தான் அணியானது சிறந்த அணியாக இருந்தது. ஆனால் எங்களினால் குவாலிபை ஆக முடியவில்லை. ஒரு விஷயம் நம்முடைய கைகளை மீறி சென்று விட்டது என்றால் அதனை பற்றி நாங்கள் அதிகமான யோசிக்க மாட்டோம் என்றார் யுஸ்வேந்திர சாஹல்.

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் ஆர்சிபிக்கு கேப்டனாக பாப் டுபிளெஸ்ஸி விளையாடினார். தொடக்கத்தில் மிகவும் சிறப்பாக விளையாடிய ஆர்சிபி பின்னர் குவாலிபயர் போட்டிக்கு ஒரு வெற்றி இருந்தால் போதும் என்ற நிலையில் ஆர்சிபி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் தோவியை தழுவியது.





