ஆஸ்திரேலியா அணியின் சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயோன் தனக்கு எதிரான பலமான பேட்ஸ்மேனின் பட்டியலில் தற்போது அவர் வெளியிட்டு உள்ளார். ஆஸ்திரேலியா அணியின் தற்போது நான்காவது வீரராக வரலாற்றில் 500 விக்கெட்களை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை கடந்த மாதம் அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் படைத்திருந்தார்.தற்போது ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணி நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நாதன் லயன் சிறப்பான பந்துவீச்சால் பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது.

அதில் நாதன் லயன் தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு அவர் சிறப்பான பந்துவீச்சினை வழங்கிக் கொண்டிருக்கிறார்.மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி நடைபெற உள்ளது. பகல் இரவு ஆட்டம் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி White Wash செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலியா அணி தயாராகி வருகிறது. இவர் 2011 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை அவர் தொடங்கினார்.

மேலும் இவர் ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே இடத்தை பூர்த்தி செய்யும் வகையில் அவர் ஆஸ்திரேலியா அணியில் இணைந்தார். அவர் தற்பொழுது சர்வதேச போட்டிகளில் தனக்கு எதிரான சிறந்த மூன்று பேட்ஸ்மேனிகளின் பெயர்களை தற்போது அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், முதலில் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் இரண்டு இந்திய வீரர்களான முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியின் பெயர்களை அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் நான் விளையாடிய சிறந்த வீரர் இது ஒரு மிகவும் கடினமான கேள்வி நான் சில ஜாம்பவான்களுக்கு எதிராக நான் பந்த வீசிய உள்ளேன். உங்களுக்கு மூன்று பெயர்களை சொல்கிறேன் என்று கூறி அவர் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஏ பி டி டிவில்லியர்ஸ் பெயர்களை அவர் எடுத்து வைத்திருந்தார். அவர்களின் விக்கெட்டுக்களை வெளியேற்றுவது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

நாதன் லியான் இதுவரை 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவர் 505 விக்கெட்களை அவர் வீழ்த்தியுள்ளார் உள்ளார். இவர் அது மட்டுமல்லாமல் 29 ஒரு நாள் போட்டிகளையும் இரண்டு டி20 போட்டிகளில் அவர் பந்து வீசியுள்ளார். மேலும் அவர் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை பற்றி கூறுகையில் இது நான் மிகவும் பெருமைப்படக்கூடிய விஷயம், இது இன்னும் என்னைத் தாக்கியதாக நான் நினைக்கவில்லை. பயணத்தில் நிறைய கடின உழைப்பு இருந்திருக்கிறது, நல்ல நாட்களை விட மோசமான நாட்களை நான் சந்தித்திருக்கிறேன், ஆனால் நடுவில் வெளியே வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் அவர் கூறியிருந்தார்.





