மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டவது டெஸ்ட் போட்டியானது குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் களமிறங்கிய இந்தியஅணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மா அற்புதமாக தொடங்கினாலும் ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. அந்த நேரத்தில் கைகோர்த்த விராட் மற்றும் ஜடேஜா இருவரும் இணைத்து பட்டனர் ஷிப் அமைத்தனர் இதில் விராட் சதம் விளாசினார்.

இதன் மூலம் தன்னுடைய 500வது சர்வதேச போட்டியில் 100 அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் எப்போதும் விக்கெட்டுகள் விழுவதை தடுத்து நிறுத்திய ஜடேஜாவும் 152 பந்துகளில் 61 ரன்களை விளாசினார். இவரது விக்கெட்டிற்கு பிறகு கடந்த போட்டியில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த இஷான் கிஷன் இந்த போட்டியில் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் அதற்கு பிறகு வந்த அஸ்வின் திறமையான விளையாட்டை விளையாடி 78 பந்துகளில் 56 ரன்களை விளாசினார்.
இதனால் இந்திய அணியானது 128 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்களை விளாசியது. இதனையடுத்து உங்களுடைய முதல் இன்னிங்கை ஆட வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான தொடக்கத்தை கொடுக்க அப்போது மழை குறுக்கிட்டு போட்டியானது பாதியில் நிறுத்தப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு இந்தியா அணிக்கு விக்கெட்டுகள் என்பது மிகவும் குறைவாகவே விழுந்தது.

அஸ்வின் போட்ட மேஜிக் பந்து :
இந்நிலையில் இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வைட் நங்கூறமாக நின்று ரன்களை பந்துகளை அடித்து கொண்டிருந்தார். இதனால் இந்திய அணிக்கு விக்கெட் விழுகவே இல்லை. மேலும் இவர் ஸ்டெம்புகளை மறைத்து விளையாடுவதினால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இவருடைய விக்கெட்டை வீழ்த்த கடினமாக இருந்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 235 பந்துகளில் ஆடிய பிறகு அஸ்வின் ஒரு மேஜிக் செய்தார்.
Ashwin's wizardry✨ breaks through Brathwaite's resistance!#WIvIND #SabJawaabMilenge #JioCinema pic.twitter.com/wJz8Ut3tX8
— JioCinema (@JioCinema) July 22, 2023
அதாவது 73வது ஓவரில் பந்து வீச அந்த ஓவரின் 2 பந்தில் 4 அடித்தார் கிரேக் பிராத்வைட். பின்னர் அவரின் ஆட்டத்தை கடித்த அஸ்வின் மேஜிக் பந்தை ஆஃப் சைடில் வீசினார். ஆனால் அந்த பந்து பாம்பு போல நெகிழ்ந்து உள்ளே சென்று ஸ்டெம்புகளை தாக்கியது. இதனை பார்த்த அவர் பந்து எப்படி சென்றது என்று தெரியாமல் ஆச்சரியமடைந்தார். இதனால் 235 பந்துகள் ஆடி 75 ரன்கள் எடுத்த பிறகு ஆட்டமிழந்தார். அந்த வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
போட்டியை பொறுத்தவரையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா சார்பில் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டும், அஸ்வின் மற்றும் முகேஷ் குமார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.




