இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் நடித்த விளம்பரம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ராகுல் டிராவிட் நவீன இந்திய கிரிக்கெட்டின் தொடக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். இவரது தலைமையில் தான் பல இளம் வீரர்கள் இந்தியாவில் இணைத்தனர். அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய U 19 அணியின் பயிற்சியாளராக இருந்து கோப்பையையும் பெற்று கொடுத்தார்.

இதனையடித்து தான் ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றார். ஆனால் இவர் பொறுப்பேற்ற பிறகு பலவிதமான விமர்சனங்கள் இவரின் மீது வைக்கப்பட்டது. இருந்த போதிலும் தான் ஒரு இளம் பயிற்சியாளர் என்பதினால் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
நடித்த விளம்பரம் :
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்ன ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் ராகுல் டிராவிட் நடித்திருந்தார். அந்த விளம்பரத்தில் கோவமான “நான் இண்டிரானாகர் ரவுடி” என்ற கதாபாத்திரத்தில் சித்தரித்து நடித்திருந் அவர் ட்ராபிக் சிக்னலில் சிக்கிக் கொள்ளும் டிராவிட் வங்கிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் மிகவும் கோபமடைந்து கத்துவது போல காட்சிகளானது அமைக்கப்பட்டிருந்தது.

இந்த காட்சிகளில் தான் நடித்திருந்தாலும் தன்னுடய அம்மாவிற்கு இது பிடிக்கவில்லை என்று சமீபத்தில் யூடியூப் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் டிராவிட் கூறியுள்ளார். அவர் பேசுகையில் “இந்த விளம்பரத்தில் நான் நான் நடித்ததில் இருந்து இருந்து என்னை பலரும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்து விட்டனர். நான் எபோதுமெண்டுமானாலும் கோவப்பட்டு அதனை போல வெடிப்பேன் என்று நினைக்க தொடங்கி விட்டார்கள்.
அம்மாவிற்கு பிடிக்கவில்லை :
அந்த விளம்பரத்தில் நான் நடித்தது நன்றாக இருந்தது, அதற்கு மக்களிடம் இருந்து நேர்மறையாக கருத்துக்களும் வந்தது. இதனால் என்னுடைய அம்மாவிடம் இருந்தும் நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய அம்மாவிற்கு நான் அப்படி நடித்தது பிடிக்கவில்லை. அதிலும் நான் கோவப்பட்டு ஒரு காரின் கண்ணாடியை பேட்டையை வைத்து உடைப்பது போன்ற காட்சிகளை பார்த்துவிட்டு நீயா இப்படி செய்தாய்? என்று கேட்டுவிட்டார்.

அந்த மாதிரி நன் கோவப்பட்டு கண்ணடிகளை உடைத்திருக்க கூடாது என்று அவர் இன்று வரையில் நினைக்கிறார் என்றார் ராகுல் டிராவிட். மேலும் அந்த விளம்பரத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய அவர் கூறுகையில் “பம்பாயில் அதுவும் நாடு தெருவில் நான் செய்த இந்த விஷயம் மிகவும் சங்கடமான விஷயங்களில் ஒன்றாகும். இது ஒரு விளம்பர படப்பிடிப்பு என்றாலும், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் இருக்கிறார்கள்.
உங்களை சுற்றியும் பகுதி நேர நடிகர்களும், மக்களும் இருக்கின்றனர். இன்னும் என்னைப் போன்ற ஒருவர் அந்த சாலையின் நடுவில் நின்று கத்திக் கொண்டே கூச்சலிடுவது என்பது உண்மையில் சங்கடமான ஒரு விஷயம் என்றே கூறலாம் என்றார் ராகுல் ட்ராவிட். இதனிடையயே ராகுல் ட்ராவிட் பயிற்சியாளராக கடந்த 2 வருடங்களில் இந்தியா இரண்டு உலக கோப்பைகளில் தோற்ற நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.





