உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை ஒருநாள் போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. ஆனால் இந்த போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது 146 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக உலக கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறியது. இது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது மட்மல்லாமல் அவர்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட சமீப காலங்களில் மேற்கிந்திய தீவுகளில் கிரிக்கெட் என்பது மிகவும் மோசமாகி வருகிறது. அங்குள்ள பலரும் கிரிக்கெட் விளையாட்டிற்கு பதிலாக கூடை பந்து, ரக்பீ போன்ற விளையாட்டுகளுக்கு மாற தொடங்கி விட்டனர். இப்படிப்பட்ட நிலையில் உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது இந்த விஷயங்களை மேலும் பாதித்துள்ளது. இந்நிலையில் பலரும் தங்களுடைய கருத்து கூறிவரும் நிலையில் தான் முன்னாள் இந்திய அணியில் வீரர் தீப் தாஸ்குப்தா யோசனை ஒன்றை சொல்லியிருக்கிறார்.
அவர் கூறியதாவது “டெஸ்ட் கிரிக்ட்டில் அடிப்படையில் சாத்தியம் உள்ளது, சிவப்பு பந்து கிரிக்கெட்டில் திறமை இருக்கிறது. பல இளையவர்கள் வருவதை நாங்கள் பார்த்தோம். ஆனால் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியை வெற்றியடையச் செய்ய அல்லது போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்ற, அவர்கள் உண்மையில் செய்ய வேண்டியது டெஸ்ட் போட்டிகளில் மேலும் மேலும் விளையாடி கொண்டே இருப்பதுதான்.

சிறந்த 4-5 அணிகளுக்கு எதிராக முடிந்தவரை பல டெஸ்ட் போட்டிகளை அவர்கள் விளையாட வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் சில சமயங்களில் அது சாத்தியமில்லை, அது நடைமுறையிலும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலை எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அதாவது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் ஒரு சில வீரர்களை அடையாளம் கண்டு, அவர்கள் நடத்தும் இந்தியாவில் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்பதே நான் கூறும் வழி.
இது இங்கே அக்டோபர்-நவம்பர் என இரண்டு மாதங்களுக்கு நடக்கும். வெஸ்ட் இண்டீஸ் அணியில் திறமை வாய்ந்த 4-5 இளைஞர்களையும், முக்கியமாக சிவப்பு பந்து பந்துவீச்சாளர்களில் சிலரையும் சிலரையும் ரஞ்சி டிராபியில் ஆட வைக்கலாம். நம்மிடம் 38 முதல்தர அணிகள் உள்ளன. எனவே 4-5-6 வீரர்களை எளிதாக நம்முடைய அணியில் சேர்த்துக் கொள்ள முடியும். அப்படி செய்தால் அது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு பெரும் உதவியாக இருக்கும், போட்டித்தன்மையும் அதிகரிக்கும் என்றார் தீப் தாஸ்குப்தா.

இந்நிலையில் ரஞ்சி டிராபியை பொறுத்தவரையில் அந்த போட்டியானது சர்வதேச வீரர்களை அனுமதிக்காத ஒரு போட்டியாகும். மேலும் பரபரப்பான சர்வதேச அட்டவணை மற்றும் டி20 லீக்குகளின் காளான்களைக் கருத்தில் கொண்டு இப்போது அதை மாற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் அப்படி ஒரு மற்றம் இந்திய கிரிக்கெட்டில் வரும் போது மேற்கிந்திய வீரர்கள் நிச்சயம் பயனடைவார்கள்.




