இந்திய கிரிக்கெட் அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், மற்றும் 5 டி20 போட்டிகளை விளையாட இருக்கிறது. மேலும் இந்த வரும் 2023 – 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இந்த போட்டியும் வருவதினால் இந்தியா வென்றியுடன் தங்களுடைய பயணத்தை தொடங்க வேண்டும் என்று நினைக்கிறது. இந்நிலையில் முதல் போட்டியில் அற்புதமான வெற்றியை பதிவு செய்த இந்தியா வெற்றி பெற்றது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டவது டெஸ்ட் போட்டியானது குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் களமிறங்கிய இந்தியஅணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மா அற்புதமாக தொடங்கினாலும் ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. அந்த நேரத்தில் கைகோர்த்த விராட் மற்றும் ஜடேஜா இருவரும் இணைத்து பட்டனர் ஷிப் அமைத்தனர் இதில் விராட் சதம் விளாசினார்.
இதன் மூலம் தன்னுடைய 500வது சர்வதேச போட்டியில் 100 அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் எப்போதும் விக்கெட்டுகள் விழுவதை தடுத்து நிறுத்திய ஜடேஜாவும் 152 பந்துகளில் 61 ரன்களை விளாசினார். இவரது விக்கெட்டிற்கு பிறகு கடந்த போட்டியில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த இஷான் கிஷன் இந்த போட்டியில் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் அதற்கு பிறகு வந்த அஸ்வின் திறமையான விளையாட்டை விளையாடி 78 பந்துகளில் 56 ரன்களை விளாசினார்.

இதனால் இந்திய அணியானது 128 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்களை விளாசியது. இதனையடுத்து முதல் இன்னிங்கை ஆட வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான தொடக்கத்தை கொடுக்க அப்போது மழை சில முறை குறுக்கிட்டது. இருந்த போதிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை 255 ரன்களுக்கு கட்டுக்குள் கொண்டுவவந்தது. மேலும் மழை வரும் காலங்கள் பெய்யலாம் என்றிருந்த நிலையில் அதிக வேகமாக விளையாடியது இந்தியா.

சாதனை படைத்த இந்தியா :
தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மா ஐபிஎல் போட்டியை போல அதிரடியாக விளையாட இந்திய அணியானது வெறும் 12.2 ஓவர்களிலேயே 100 ரன்களை கடந்தது. இதன் மூலம் 146 வருட கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டியில் குறைவான ஓவர்களில் 100 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை படைத்தது இந்தியா. இதற்கு முன்னர் கந்த 2001ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா 100 ரன்களை 13.2 ஓவர்களில் எடுத்திருந்த நிலையில் அந்த சாதனையை முறியடித்துள்ளது இந்தியா.

மேலும் இதற்கு இதுக்கு பிறகு கந்த போட்டிகளில் சிறப்பாக செயல்படாத இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 52 ரன்களை விளாசினார். இதனையடுத்து மழை மற்றும் ஒருநாள் மட்டுமே இருப்பதினால் அதனை கருத்தில் கொண்டு இந்திய அணி 181 ரன்களுக்கு டிக்ளர் கொடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 2 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.




