சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எப்படி விராட் கோலியோ அப்படி பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் சிறப்பாக விளையாடி வருகிறார். சொல்லப்போனால் தற்போதய காலங்களில் விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு பேசும் அளவிற்கு அசாதாரணமான திறமைகளை காட்டி வருகிறார் பாபர் அசாம். மறுபுறம் ஒரு காலத்தில் எந்த பந்து போட்டாலும் அதிரடியாக விளையாடி ரன் மெஷின் என பெயர் எடுத்த கோலி தற்போது விளையாடுவதற்கு தடுமாறி வருகிறார்.

சமீப காலமாக அவருடைய பேட்டிங் என்பது முழு வீச்சில் இல்லை என்பது நன்றாகவே கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் தெரிந்தது. இதனிடையே பாபர் அசாம் தற்போது சர்வதேச பேட்ஸ்மேன்கள் பட்டியலில் மூன்றவது இடத்தில் இருக்கிறார். இப்படிபட்ட நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் நவீன் உல் ஹசன் விராட் கோலி மற்றும் பாபர் அசாமை ஒப்பிட்டு சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
நவீன் உல் ஹசன் பேட்டி :
அவர் கூறுகையில் “எப்போதுமே விராட் கோலியையோ அல்லது பாபர் அசாமையோ ஒப்பிடும் போது பாபர் அசாம் விராட் கோலியை விடவும் டெக்கனிக்களாக சிறந்தவர். அதனால் தான் வருக்கு குறைவான தோல்விகளே கிடைக்கிறது. கோலி கடந்த ஒரு ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகளாக விளையாட போராடி வருகிறார். ஏனென்றால் அவர் பாட்டம் ஹண்ட் வீரர். அந்த வகையான வீரர்கள் தோல்வியடைந்தால் அதிலிருந்து மீள காலம் அதிகம் பிடிக்கும்.

பாபர் அசாம் டெக்னிக்களாக சிறப்பான ஷாட்டுகளை விளையாடுவார். ஆனால் விராட் கோலி அவரை விட பல ஷாட்டுகளில் விளையாடுவர். இருப்பினும் பாபர் அசாம் குறைவான ஷாட்டுகளையே மிகவும் சிறப்பக கையாளுவார். வீராட் கோலி இத்தனை ஷாட்டுகளை விளையாட காரணம் இந்தியாவில் இருக்கும் பிட்சுக்கள் தான். அவர் பேட்டிங் செய்ய மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் ஐபிஎல் போட்டியில் பல உலக தரம் வாய்ந்த வீரர்களை எதிர்கொள்கிறார் என்றார் நவீன் உல் ஹசன்.

மேலும் பேசிய அவர் ஆச்சரியமளிக்கும் விஷயத்தையும் கூறினார். அவர் கூறியதாவது “நான் மட்டும் என்னுடைய பழைய ரிதத்தில் இருந்தேன் என்றார் விராட் கோலியை மிகவும் சுலபமாக அவுட் செய்து விடுவேன். என்னால் அவுட் ஸ்விங் செய்ய முடியும் அதனால் நான் விராட் கோலியை ஸ்லிப்பிலோ அல்லது விக்கெட் கீப்பரிரிடமோ கேட்ச் கொடுத்து அவுட் செய்ய முடியும் என்றார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் நவீன் உல் ஹசன்.





