சமீபத்தில் தொடங்கிய அஷஸ் 2023 போதில் ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டியில் பிரமாதமாக விளையாடி திரிலிங் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் தற்போது 2 வது போட்டியானது லார்ட் மைத்தனத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியக்கு தொடக்கத்தில் ஒரு விக்கெட் விழுந்தாலும் சிறப்பாக விளையாடி 417 ரன்களை அடித்தார்கள். இதில் டிராவிஸ் ஹெட் 77 ரன்களும், ஸ்மித் 111 ரன்களையும் விளாசினார்கள்.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தது ஆஸ்திரேலியாவின் அபாரமான பந்துவீசல் ஆட்டமிழக்க மறுபுறம் பென் டக்கெட்ட 98 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்கில் 325 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இதனால் இரண்டாவது இன்னிங்கில் ஆஸ்திரேலியாவிற்கு சுலபமாக இருந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியா 2 வது இன்னிங்கில் 279 ரன்களை விளாசி 371 என்ற மெகா டார்கெட்டை ஆத்திரேலியா இங்கிலாந்திற்கு வைத்தது. இந்நிலையில் இரண்டவது இன்னிங்கை ஆடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சாக் கிராலி மற்றும் ஓலி போபே, ஹாரி ப்ரூக் போன்றபாகள் சொற்ப ரன்களில் வெளியேற இங்கிலாந்திற்கு அழுத்தம் கூடியது.
Well then…
— England Cricket (@englandcricket) July 1, 2023
What do we think of this one? 👀
Cleary grounded 😉 #EnglandCricket | #Ashes pic.twitter.com/bPHQbw81dl
இந்நிலையில் விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுக மறுபக்கம் பொறுமையாக விளையாடிய பென் டக்கட் அரை சதத்தை விளாசினார். இந்நிலையில் 28 வது ஓவரை கேமரூன் க்ரீன் வீச வந்தார். அப்போது ஸ்ட்ரைக்கில் பென் டக்கட் இருந்தார். இந்நிலையில் அந்த ஓவரின் 5 வது பந்துல பென் டக்கட் பயின் லெக்கில் அடிக்க அதனை ஓட்டிவந்து அற்புதமான ஒரு கேட்ச்சை பிடித்தார் ஸ்டார்க். இது சரியாக தெரியாத காரணத்தினால் 3rd அம்பயர்களிடம் சென்றனர்.

அப்போது அந்த கேட்சை பார்த்த 3rd அம்பயர் அனைவரும் ஆச்சரியமடையும் படி நாட் அவுட் கொடுத்தார். வீடியோவில் ஸ்டார்க் முதலில் அந்த கேட்சை பிடித்து விட்டார். ஆனால் பிடித்த பிறகு பந்து மைதானத்தில் பட்டது. இதனால் நாட் அவுட் என்று சொல்லப்பட்டது. இத்தனைடையே பாதி தூரம் சென்ற பென் டக்கட் மீண்டும் விளையாட பீட்ச்சிற்கு திரும்பினார்.
ஆனால் இங்கு இது சர்ச்சையாக காரணம், இதே போல ஒரு சூழ்நிலை தான் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியின் போது ஏற்படும். அதில் சுப்மன் கில்லிற்கு அவுட் கொடுத்தனர். ஆனால் இங்கு அவுட் கொடுக்கவில்லை. அதற்கு காரணம் சுப்மன் கில் அவுட்டின்போது பந்தின் கீழே விரல்கள் இருந்தது. ஆனால் இங்கே விரல்கள் பந்தின் கீழே இல்லை என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும் இந்த கேட்ச் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.





